
‘’கருணாநிதி பிறந்த நாள் – சர்வதேச ஊழல் தினம்,’’ என்று கூறி ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன்பேரில், உண்மை கண்டறியும் சோதனை நடத்த தீர்மானித்தோம்.
தகவலின் விவரம்:

Archived Link
குமரிமைந்தர்கள் என்ற ஃபேஸ்புக் ஐடி, இந்த பதிவை வெளியிட்டுள்ளது. இதனை பார்க்கும்போதே ஃபோட்டோஷாப் செய்த ஒன்று என தெளிவாக தெரிகிறது. இருந்தாலும், இதனை உண்மை என நம்பி பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
மேற்கண்ட பதிவில் ரெட் மார்க் செய்த பகுதியில், ‘’சர்வேதேச ஊழல் தினம்,’’ என எழுத்துப் பிழையுடன் உள்ளது. இதுதவிர, அந்த காலண்டரில் உள்ள மற்ற எழுத்துகளுக்கும், இந்த எழுத்துக்கும் இடையே ஃபான்ட் வித்தியாசமும் உள்ளது. இது மட்டுமா, சர்வதேச ஊழல் தினம் என ஒன்றே கிடையாது.
முதலில், குறிப்பிட்ட, காலண்டர் தேதி புகைப்படம் உண்மையானதுதானா என, #Yandex இணையதளத்தில் பதிவேற்றி, ஆதாரம் தேடினோம். அப்போது, இதுதொடர்பான உண்மையான ஆதாரம் கிடைத்தது.

இதன்படி மேற்கண்ட இணைப்பை கிளிக் செய்தபோது, அது https://www.srirangaminfo.com/Tamil-daily-calendar.php என்ற இணையதள முகவரிக்குச் சென்றது. அந்த இணையதளத்தில்தான் இக்குறிப்பிட்ட காலண்டர் தேதி வெளியிடப்பட்டுள்ளது. இதனை எடுத்தே பலரும் ஃபோட்டோஷாப் செய்துள்ளதும் இதிலிருந்தே தெளிவாகிறது. உண்மையான, காலண்டர் தேதியின் விவரம் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

இதன்படி, ஆன்லைனில் கிடைக்கும் காலண்டர் தேதியை எடுத்து, தங்களுக்கு சுய அரசியல் லாபத்திற்காக, தவறான முறையில் ஃபோட்டோஷாப் செய்து, இந்த படத்தை பரப்பியுள்ளது, தெரியவருகிறது.

இதுதவிர, சர்வதேச ஊழல் தினம் என எதுவும் கிடையாது. சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினம்தான் உள்ளது. சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினம் ஆண்டுதோறும் டிசம்பர் 9ம் தேதி அனுசரிக்கப்படுகிறது.

சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினத்திற்கும், சர்வதேச ஊழல் தினத்திற்கும் வித்தியாசம் தெரியாமல், இல்லாத ஒன்றை இருப்பதுபோல சித்தரித்து, ஃபேஸ்புக்கில் பகிர்ந்துள்ளதாக, தெரியவருகிறது.
இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில், நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட ஃபேஸ்புக் பதிவு தவறான ஒன்று என முடிவு செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின்படி, மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறான ஒன்று என நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் யாரும் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோ பதிவுகளை சமூக ஊடகங்களில் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.
