சீமான் பேசியதற்கு மறுப்பு தெரிவித்து விடுதலைப் புலிகள் அறிக்கை வெளியிட்டனரா?

அரசியல் | Politics சமூக ஊடகம் | Social

‘’சீமான் பேசியதற்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் விடுதலைப் புலிகள் அறிக்கை வெளியிட்டுள்ளனர்,’’ என்று கூறி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வரும் செய்தியை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.

தகவலின் விவரம்:

Facebook LinkArchived Link 1OneIndia NewsArchived Link 2

Oneindia Tamil எனும் ஃபேஸ்புக் ஐடி தனது இணையதளத்தில் வெளியிட்ட செய்தியின் லிங்கை, இந்த ஃபேஸ்புக் பதிவில் பகிர்ந்துள்ளது. அந்த செய்தியை கிளிக் செய்து படித்தபோது, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ராஜீவ் காந்தி படுகொலை பற்றிய பேசியதற்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில், விடுதலைப் புலிகள் அமைப்பு அறிக்கை வெளியிட்டதாக, தெரிவித்துள்ளனர். இதனை பலரும் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.

அத்துடன் முன்னணி தமிழ் ஊடகங்களும் இந்த செய்தியை வெளியிட்டுள்ளன.

Maalaimalar News LinkArchived Link
Dinakaran News LinkArchived Link 
Dinamalar News Link Archived Link 
JayaNews Link Archived Link 
Samayam Tamil LinkArchived Link 
Asianet Tamil LinkArchived Link 

உண்மை அறிவோம்:
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரசாரத்தில் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை கொன்றது நாங்கள்தான் (விடுதலைப் புலிகள்தான்) எனும் அர்த்தத்தில் பேசியிருந்தார். 

சீமான் பேச்சால் தமிழக அரசியலில் புதிய சர்ச்சை ஏற்பட்ட நிலையில், அவரது பேச்சிற்கு மறுப்பு தெரிவித்து, விடுதலைப் புலிகள் அறிக்கை ஒன்றை வெளியிட்டதாகக் கூறி முன்னணி தமிழ் ஊடகங்களும் ஃபேஸ்புக் பயனாளர்களும் செய்தி வெளியிட்டு வருகின்றனர்.

உண்மையில், விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு தற்போது எந்த அதிகாரப்பூர்வ தலைமையும் கிடையாது. 2009ம் ஆண்டு நடைபெற்ற இறுதிக்கட்ட ஈழப் போரில், விடுதலைப் புலிகள் அமைப்பு முற்றிலும் அழிக்கப்பட்டுவிட்டதாக, இலங்கை அரசு அறிவித்திருந்தது. அத்துடன், அந்த அமைப்பின் தலைவர் பிரபாகரன் உள்பட முக்கிய தலைவர்கள் அனைவருமே கொல்லப்பட்ட நிலையில், நாடு கடந்த தமிழீழ அரசு செயல்படும் என, சிலர் அறிவிப்பு வெளியிட்டனர். ஆனாலும், இவர்களின் செயல்பாடு எதுவும் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்படவில்லை.

விடுதலைப் புலிகள் அதிகாரப்பூர்வமாகச் செயல்பட முடியாத அளவிற்கு நிர்வாக ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் உலக அளவில் ஒடுக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில்தான் சீமான் பேசியதற்கு விடுதலைப் புலிகள் மறுப்பு தெரிவித்தது போல மேற்கண்ட செய்தி, ஃபேஸ்புக்கில் பலராலும் பகிரப்பட்டு வருகிறது.

இவர்கள் பகிர்ந்து வரும் அறிக்கை, கடந்த டிசம்பர் 1, 2018ம் ஆண்டு விடுதலைப் புலிகளின் பெயரில் லதன் சுந்தரலிங்கம், குருபரன் குருசாமி ஆகியோர் வெளியிட்டதாகும். இவர்களும் கூட விடுதலைப் புலிகளின் அதிகாரப்பூர்வ நிர்வாகிகள் இல்லை என ஒரு சாரார் மறுப்பு தெரிவிக்கின்றனர். இதுபற்றிய செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

இந்த வதந்திகள் குறித்து மூத்த செய்தியாளரும், ஐ.நா. சபை மற்றும் ஈழ ஆதரவாளர்களுடன் நெருங்கிய தொடர்பு உள்ளவருமான விஷ்வா விஸ்வநாத் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் விரிவாக ஆய்வு செய்து மறுப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

Archived Link

(விஷ்வா விஸ்வநாத் 2018, டிசம்பர் 1ல் வெளியிட்ட பதிவை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.) 

இவர் சொல்வதுபோல டிசம்பர் 1, 2018 அன்று இதே அறிக்கை வெளியிடப்பட்டிருந்தது உண்மைதான். அந்த செய்தி விவரம் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

Tamilwin News LinkArchived Link 
Thereport.co.in Link Archived Link 

இதேபோல, ஜேவிபி நியூஸ் வெளியிட்ட செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் 2018, டிசம்பர் 1ம் தேதி விடுதலைப் புலிகள் பெயரில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் இடம்பெற்ற கருத்துகள் அப்படியே வார்த்தை மாறாமல் தற்போதும் மறுபகிர்வு செய்யப்பட்டுள்ளது. அதில் உள்ள தேதியை மட்டும் நீக்கிவிட்டு, பழைய அறிக்கையை புதிதுபோல பரப்பி வருவது தெளிவாகிறது.

இதைவிட முக்கியமான விசயம் விடுதலைப் புலிகள் அமைப்பு முற்றிலும் முடக்கப்பட்ட நிலையில், அதன் பெயரை யார் வேண்டுமானாலும் பயன்படுத்தி தவறான கருத்தை பரப்ப முடியும் என்பதே யதார்த்த உண்மை.

எனவே, மேற்கண்ட ஃபேஸ்புக் செய்தியில் நம்பகத்தன்மை இல்லை என உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் பழைய அறிக்கையை புதிதுபோல பகிரப்படுவதாக, நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய குழப்பமான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:சீமான் பேசியதற்கு மறுப்பு தெரிவித்து விடுதலைப் புலிகள் அறிக்கை வெளியிட்டனரா?

Fact Check By: Pankaj Iyer 

Result: False