மதுரை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் வெங்கடேசனுக்கு வரவேற்பு!

அரசியல் சமூக ஊடகம்

‘மதுரை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் வெங்கடேசனுக்கு வரவேற்பு’ என்ற ஒரு பதிவை ஃபேஸ்புக்கில், காண நேரிட்டது. 10,000க்கும் அதிகமான ஷேர்களை பெற்றுள்ள இந்த செய்தி உண்மைதானா என ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.

தகவலின் விவரம்:
நாம் எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை.. ஆனால் இவரை போன்றோர் நிச்சயம் வெல்ல வேண்டும்.. சிறப்பான தேர்வு ?

Archived Link

இந்த பதிவில், வெங்கடேசன் புகைப்படத்தை பகிர்ந்து, அதன் மேலே, ‘’அரசியல் வேறுபாடு கடந்து மதுரை நாடாளுமன்ற தொகுதி சிபிஎம் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள சு.வெங்கடேசன் வரவேற்கப்பட வேண்டியவர்! கீழடி பற்றிய பல உண்மைகளை வெளிக்கொண்டு வந்தவர்.. சாகித்ய அகாதமி விருது வாங்கியவர்.. மாபெரும் காவியமான வேள்பாரி நாவல் எழுதியவர், என பல சிறப்புகளை பெற்ற தமிழகத்தின் மிகச் சிறந்த எழுத்தாளரான சு.வெங்கடேசன் கட்டாயம் நாடாளுமன்றம் செல்ல வேண்டியவர்.. இவரை போன்றோர் நாடாளுமன்றம் சென்றால்தான் தமிழக உரிமைகள் நிலைநாட்டப்படும்.!,’’ என எழுதியுள்ளனர்.

உண்மை அறிவோம்:
Memes Tamizha என்ற ஃபேஸ்புக் குழு மேற்கண்ட பதிவை வெளியிட்டுள்ளது. மார்ச் 15ம் தேதி வெளியிடப்பட்ட இந்த பதிவு பற்றி குறிப்பிட்ட ஃபேஸ்புக் குழுவே விளக்கம் அளித்துள்ளது. இது அரசியல் சார்பானது இல்லை என்றும், தான் யாருக்கும் ஆதரவு இல்லை என்றும், சமூக நலன் கருதியே இதனை வெளியிட்டதாகவும் அந்த குழுவின் அட்மின் தரப்பில், கமெண்ட் பகுதியில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதனை விமர்சித்தும் பலர் கமெண்ட் பகிர்ந்துள்ளனர். ஆதார படம் கீழே தரப்பட்டுள்ளது.

உண்மையில், மதுரை நாடாளுமன்ற தொகுதி சிபிஐ(எம்) கட்சி வேட்பாளராக, சு.வெங்கடேசன்தான் அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் எழுத்தாளர், சமூக செயற்பாட்டாளர் என பன்முகங்களை கொண்டவர் ஆவார். கடந்த மார்ச் 15ம் தேதியன்று, திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள சிபிஐ(எம்) கட்சி சார்பாக, தமிழகத்தில் போட்டியிடும் நாடாளுமன்ற வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில், எழுத்தாளர் சு.வெங்கடேசன் மதுரையில் போட்டியிடுவார் என்றும், கோவையில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் போட்டியிடுவார் என்றும் கூறப்பட்டிருந்தது. இதுபற்றி தி இந்து தமிழ் திசை வெளியிட்டுள்ள விரிவான செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

மார்ச் 15ம் தேதி சு.வெங்கடேசன் பற்றிய அறிவிப்பை, அவரது கட்சித் தலைமை வெளியிட்ட பிறகே, அவரை வரவேற்கும் வகையில், மேற்கண்ட பதிவை, மீம்ஸ் தமிழா குழு, ஃபேஸ்புக்கில் பகிர்ந்துள்ளது. எனவே, இது உண்மைதான் என உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:
உரிய ஆதாரங்களின்படி, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட பதிவு, உண்மையான ஒன்றுதான் என உறுதி செய்யப்படுகிறது. இது நாடாளுமன்ற தேர்தல் காலம். அத்துடன், இந்த பதிவில் குறிப்பிடப்படும் நபர் பல்வேறு தரப்பினராலும் பாராட்டப்படுபவர் என்பதால், இந்த பதிவை அதிகம் பேர் ஷேர் செய்துள்ளனர்.

Avatar

Title:மதுரை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் வெங்கடேசனுக்கு வரவேற்பு!

Fact Check By: Parthiban S 

Result: True

 • 1
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
  1
  Share