இந்தியா தமிழர்களுக்குச் சொந்தமானது: மம்தா பானர்ஜி சொன்னது உண்மையா?

அரசியல் சமூக ஊடகம்

இந்திய நாடு தமிழர்களுக்குச் சொந்தமானது என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சொன்னதாகக் கூறி வைரலாக பகிரப்பட்டு வரும் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன்பேரில், உண்மை கண்டறியும் சோதனை நடத்தினோம்.

தகவலின் விவரம்:

Archived Link

திமிரு பிடிச்ச தனிஒருவன் என்ற ஃபேஸ்புக் குழு இந்த பதிவை வெளியிட்டுள்ளது. இதனை இதுவரை 17 ஆயிரம் பேர் ஷேர் செய்துள்ளனர். மேலும் இது வைரலாகி வருவதால், இதன் உண்மைத்தன்மையை பரிசோதிக்கும்படி நமது வாசகர் ஒருவர் இமெயில் அனுப்பியிருந்தார்.

உண்மை அறிவோம்:
குறிப்பிட்ட பதிவில் கூறப்பட்டுள்ளது போல, இந்தியாவில் இருந்து அன்னியர்கள் வெளியேற வேண்டுமெனில், தமிழர்களை தவிர அனைவரும் வெளியேற வேண்டும் என்று மம்தா பானர்ஜி சொன்னாரா என தகவல் தேடிப் பார்த்தோம்.

முதலில், கூகுளில் சென்று, ஆங்கிலத்தில் விவரம் தேடினோம். ஆனால், அப்படி எந்த தகவலும் கிடைக்கவில்லை.

இதன்படி, எங்கேயும் மம்தா பானர்ஜி சமீபத்தில் இப்படி கூறவில்லை என தெளிவாகிறது. இதுதவிர மீண்டும் ஒருமுறை இப்படி செய்தி வெளியாகியுள்ளதா, என தேடிப் பார்த்தோம்.

அப்போது, இந்தி திணிப்பு பற்றி மம்தா பானர்ஜி கருத்து கூறியதாக ஒரு செய்தி ஆதாரம் நமக்குக் கிடைத்தது.

அதாவது, சமீபத்தில் மத்திய அரசு அமல்படுத்துவதாகக் கூறிய மும்மொழிக் கொள்கை பற்றி மம்தா பானர்ஜி எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். தமிழ் உள்பட பல்வேறு பிராந்திய மொழிகள், இந்தி திணிப்பால் பாதிக்கப்படும் என்றும் மம்தா பானர்ஜி கூறியிருப்பதாக, அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுபற்றி தி எகனாமிக் டைம்ஸ் வெளியிட்ட செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும். இதேபோல, பிசினஸ் ஸ்டேண்டர்ட் வெளியிட்ட செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்து படியுங்கள்.

இதன்படி, மம்தா பானர்ஜி எந்த இடத்திலும் இந்தியா என்பது தமிழர்களுக்குச் சொந்தமான நாடு என்று கூறவில்லை. தமிழர்கள் மீது இந்தி மொழி திணிக்கப்படுவதற்கு அவர் கண்டனம் தெரிவித்திருக்கிறார். இதுபற்றிய ஆதாரமும் நமக்குக் கிடைத்துள்ளது. இருந்தாலும், ஒருமுறை அவரது ட்விட்டர் பக்கத்தில் ஏதேனும் இப்படி கருத்து வெளியிட்டுள்ளாரா என தேடிப் பார்த்தோம். ஆனால், அவர் அப்படி எதுவும் சொல்லவில்லை. ஜூன் 11ம் தேதி இந்தி திணிப்பு பற்றிய அவரது பேட்டி விவரம் கீழே தரப்பட்டுள்ளது.

இந்த பேட்டியிலும் மம்தா பானர்ஜி இந்தியா என்பது தமிழர்களுக்குச் சொந்தமான நாடு என, எங்கேயும் குறிப்பிடவில்லை.

இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட ஃபேஸ்புக் பதிவு தவறான ஒன்று என முடிவு செய்யப்படுகிறது.

முடிவு:
உரிய ஆதாரங்களின்படி, நாம் ஆய்வு செய்த மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் யாரும் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோ பதிவுகளை மற்றவர்களுக்கு சமூக ஊடகங்கள் வாயிலாக பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:இந்தியா தமிழர்களுக்குச் சொந்தமானது: மம்தா பானர்ஜி சொன்னது உண்மையா?

Fact Check By: Parthiban S 

Result: False