
‘’பாம்பு போன்ற கால்சட்டையை அணிந்த மனைவியை அடித்த கணவன்‘’, என்ற தலைப்பில் ஒரு செய்தியை காமதேனு இணையதளம் வெளியிட்டிருந்தது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை நடத்தினோம்.
தகவலின் விவரம்:

Archived Link
இதே பதிவை, ஹிந்து டாக்கீஸ் ஃபேஸ்புக் பக்கத்திலும் கடந்த ஜனவரி 7ம் தேதி பகிர்ந்திருந்தனர்.

Archived Link
மேற்கண்ட செய்தியை காமதேனு இணையதளத்தில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.
Archived Link
பாகிஸ்தானில், பெண் ஒருவர் பாம்பு போன்ற தோற்றத்திலான கால்சட்டை அணிந்திருந்ததாகவும், இரவில் அதனை பார்த்த அவரது கணவர் பாம்பு என்று நினைத்து அடித்ததால் அந்த பெண் காலில் காயம்பட்டார் எனவும், இந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. தி இந்து குழுமத்தைச் சேர்ந்த காமதேனு இப்படியான செய்தி பகிர்ந்துள்ளதால், பலரும் உண்மை என்றே நினைத்துள்ளனர்.
உண்மை அறிவோம்:
குறிப்பிட்ட செய்தி உண்மைதானா என முதலில் கூகுள் சென்று இப்படி எதுவும் செய்தி வெளியானதா என தேடிப் பார்த்தோம். அப்போது, இதனை பலரும் உண்மை என நினைத்து செய்தி வெளியிட்டிருந்த ஆதாரம் கிடைத்தது. அதேசமயம், AFP Fact Check இணையதளம் இது தவறான செய்தி எனக் கூறி வெளியிட்டிருந்த செய்தியின் விவரமும் கிடைத்தது.

அத்துடன், தி டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் தமிழ் இணையதள பிரிவான சமயம் தமிழ் இதே செய்தியை பகிர்ந்த விசயமும் தெரியவந்தது. அந்த செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

ஆனால், சமயம் தமிழ் தனது செய்தியை ஃபேஸ்புக்கில் பகிரவில்லை. எனவே, மறுபடியும் காமதேனு செய்தியை அடிப்படையாக வைத்து, ஆய்வை தொடர்ந்தோம். இதன்படி, AFP Fact Check வெளியிட்ட செய்தியில், Pakistani Community in Australia முதன்முதலில், 2018ம் ஆண்டு இந்த பதிவை வெளியிட்டதாகவும், பின்னர் நீக்கிவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியை அடிப்படையாக வைத்தே பலரும் செய்தி வெளியிட்டதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், பாம்பு போல உடை அணிந்த புகைப்படமும், காலில் காயம் பட்ட புகைப்படமும் வேறு வேறு சம்பவங்களாகும்.
இதன்படி, காலில் அடிப்பட்டதாகக் கூறப்படும் செய்தி வியட்நாம் நாட்டில் நிகழ்ந்ததாகும். இதேபோல, பாம்பு சட்டை உள்ளதாகக் கூறப்படும் புகைப்படம், ஜப்பானை சேர்ந்த ஒருவரால் ட்விட்டரில் பதிவிடப்பட்டதாகும். அந்த பதிவு கீழே இணைக்கப்பட்டுள்ளது.
Archived Link
இந்த பதிவை உண்மை என நினைத்து, மற்றொரு பதிவுடன் சேர்த்து தவறான வகையில் அனைவரும் சித்தரித்து பகிர்ந்துள்ளனர் என, தெளிவாகிறது. இதுபற்றிய செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.
இதன்பேரில், நமது இந்தி பிரிவு கூட உண்மை கண்டறியும் சோதனை நடத்தி அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளது. அந்த செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.
இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில், நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட காமதேனு செய்தி தவறான ஒன்று என முடிவு செய்யப்படுகிது.
முடிவு:
உரிய ஆதாரங்களின்படி, மேற்கண்ட செய்தி தவறான ஒன்று என நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் யாரும் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோ பதிவுகளை சமூக ஊடகங்களில் மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:பாம்பு என நினைத்து மனைவியை அடித்த கணவன்: காமதேனு செய்தியால் குழப்பம்!
Fact Check By: Parthiban SResult: False
