‘’கமல்ஹாசனின் திமுக ஆதரவு பிடிக்காமல் பொருளாளர் சுரேஷ், மாநில செயற்குழு உறுப்பினர் சி.கே.குமரவேல் உள்ளிட்டோர் ராஜினாமா,’’ என்று குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் பகிரப்படும் செய்தி ஒன்றை பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Facebook Claim Link I Archived Link

இதனை வாசகர் ஒருவர் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே அனுப்பி (+91 9049044263) சந்தேகம் கேட்டிருந்தார். இதன்பேரில் நாமும் ஆய்வு மேற்கொண்டபோது, ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்டவற்றில் பலரும் இதே செய்தியை உண்மை என நம்பி ஷேர் செய்வதைக் கண்டோம்.

உண்மை அறிவோம்:
குறிப்பிட்ட செய்தியை நாம் பார்வையிட்டபோது, அதில், 18.03.2019 என தேதி குறிப்பிடப்பட்டிருந்ததைக் கண்டோம். இதன்படி, இந்த செய்தி 2019ம் ஆண்டே வெளியான ஒன்று என தெரியவருகிறது.


இதுபற்றி அப்போது ஊடகங்களில் வெளியான செய்தி லிங்க் கீழே தரப்பட்டுள்ளது.


zeenews link

மக்கள் நீதி மய்யம் 2019ம் ஆண்டே வெளியிட்ட ட்வீட் கீழே தரப்பட்டுள்ளது.

இதன்பேரில் நாம் நியூஸ் 7 தமிழ் ஊடகத்தின் டிஜிட்டல் பிரிவு நிர்வாகியிடம் பேசியபோது, ‘’2019ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலின்போது, கட்சிக்குள் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக, மக்கள் நீதி மய்யத்தின் பொருளாளர் பதவியில் இருந்து சுரேஷ் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர் பதவியில் இருந்து, சி.கே.குமரவேல் ராஜினாமா செய்தனர். இதுபற்ற அப்போதே மக்கள் நீதி மய்யமும் விளக்கம் அளித்திருக்கிறது. ஆனால், 2019ல் நிகழ்ந்த இந்த செய்தியை தற்போது எடுத்து, ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுடன் தொடர்புபடுத்தி சிலர் தகவல் பகிர்கின்றனர்,’’ என்றார்.

எனவே, பழைய செய்தியை புதியதுபோல பகிர்ந்து சமூக வலைதள பயனாளர்களை குழப்பியுள்ளனர் என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.


முடிவு
:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram

Avatar

Title:மக்கள் நீதி மய்ய நிர்வாகிகள் 2019ல் ராஜினாமா செய்ததை தற்போது பரப்புவதால் சர்ச்சை…

Fact Check By: Fact Crescendo Team

Result:PARTLY FALSE