
‘’தமிழ் மொழிக்கு தனிச்சிறப்புகள் இல்லை,’’ என்று பாஜக தேசிய செயலாளர் முரளிதர் ராவ் சொன்னதாக ஒரு தகவல் வைரலாக பகிரப்படுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.
தகவலின் விவரம்:

Facebook Claim Link | Archived Link |
இதே செய்தியை மேலும் ஒரு ஃபேஸ்புக் பயனாளர் பகிர்ந்துள்ளார். அதையும் கீழே ஆதாரத்திற்காக இணைத்துள்ளோம்.

Facebook Claim Link | Archived Link |
உண்மை அறிவோம்:
மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவுகளில் கூறியுள்ளதுபோல எங்கேனும் பாஜக தேசிய பொதுச் செயலாளரும், தமிழக பொறுப்பாளருமான முரளிதர் ராவ் தமிழ், சமஸ்கிருதம் மொழிகள் பற்றி பேசியிருக்கிறாரா என விவரம் தேடினோம். அப்போது, இது சித்தரிக்கப்பட்ட தகவல் என்று ஒரு ஃபேஸ்புக் பதிவு கண்ணில் பட்டது.

Facebook Claim Link | Archived Link |
இதன்பேரில், நியூஸ் 7 தொலைக்காட்சியின் அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் பக்கங்களில் இத்தகைய நியூஸ் கார்டு வெளியிடப்பட்டதா என்ற பெயரில் வித விதமான கீவேர்டு பயன்படுத்தி தேடினோம். அப்போது, 2019ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் நியூஸ்7 தொலைக்காட்சி வெளியிட்ட நியூஸ் கார்டு கிடைத்தது.

News7 Tamil FB Link | Archived Link |
News7 Tamil Twitter Link | Archived Link |
எனவே, தமிழ் மொழியை பாராட்டி அதேசமயம் அதனை சமஸ்கிருதம் உடன் ஒப்பிட்டுத்தான் முரரளிதர் ராவ் பேசியுள்ளார். இது, 2019ம் ஆண்டில் வெளியான செய்தியாகும். அதனை தற்போது எடிட் செய்து தவறான தகவலை பரப்பியுள்ளனர்.

முடிவு:
உரிய ஆதாரங்களின்படி நாம் ஆய்வு மேற்கொண்ட ஃபேஸ்புக் பதிவில் முரளிதர் ராவ் பற்றி நியூஸ்7 தொலைக்காட்சி வெளியிட்ட நியூஸ் கார்டை தவறாகச் சித்தரித்து பகிர்ந்துள்ளனர் என்று உறுதி செய்யப்படுகிறது. நமது வாசகர்கள் இத்தகைய போலியான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியேவை மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:தமிழ் மொழிக்கு தனிச்சிறப்புகள் இல்லை என்று முரளிதர் ராவ் கூறினாரா?
Fact Check By: Pankaj IyerResult: False
