
‘’நம் உயிர் காப்பாற்ற காவல் காக்கும் இந்திய வீரரின் புகைப்படம்,’’ என்ற தலைப்பில் பகிரப்படும் ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.
தகவலின் விவரம்:

Facebook Claim Link | Archived Link |
இந்த பதிவின் கமெண்ட்களில் பலரும் மேற்கண்ட புகைப்படத்தில் இருப்பவர் இந்திய ராணுவ வீரர் என நினைத்து, பதிவிட்டதை காண முடிகிறது. எனவே, இப்புகைப்படம் ஃபேஸ்புக் வாசகர்களை குழப்புவதாக உள்ளதென்று தெளிவாகிறது.

உண்மை அறிவோம்:
இந்த புகைப்படத்தை நன்கு உற்றுப்பார்த்தால் அதில் இருப்பது, இந்திய ராணுவத்தைச் சேர்ந்தவர் இல்லை என்றும், அமெரிக்க ராணுவத்தைச் சேர்ந்தவர் என்றும் தெளிவாக தெரியவருகிறது. இதுகூட புரியாமல் இதனை இந்தியாவுடன் தொடர்புபடுத்தி, ஷேர் செய்துள்ளனர்.

இதில், US MAR என எழுத்து இடம்பெற்றுள்ளதை காண முடிகிறது. இதை வைத்துப் பார்த்தால், US Marine என வரக்கூடுமோ என்ற சந்தேகம் எழுந்தது. இதன்படி கூகுளில் தேடியபோது, மேற்கண்ட புகைப்படத்தில் இருப்பவரின் சீருடையும், அமெரிக்க கடற்படை வீரர்களின் சீருடையும் ஒத்துப் போவதை காண முடிகிறது.

இதை வைத்து தகவல் தேடியபோது, இணையத்தில் நிறைய புகைப்படங்கள் அமெரிக்க வீரர்கள் பற்றி உலா வருவதை காண முடிந்தது. அதில் ஒன்றுதான் நாம் ஆய்வு செய்யும் புகைப்படமும் என உறுதியாகிறது.

இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் நமக்கு தெரியவந்த உண்மையின் விவரம்,
1) அமெரிக்க கடற்படையினரின் தியாகத்தை வெளிப்படுத்தும் வகையில் இதுபோன்ற நிறைய புகைப்படங்கள் இணையத்தில் உலா வருகின்றன. அதில், ஒன்றுதான் நாம் ஆய்வு செய்யும் புகைப்படமும்.
2) மேற்கண்ட படத்தில் இருப்பவர் இந்திய வீரர் அல்ல. அமெரிக்க வீரர்.
முடிவு:
உரிய ஆதாரங்களின்படி நாம் ஆய்வு செய்த புகைப்படம் பற்றிய தகவல் தவறான ஒன்று என நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோ போன்றவற்றை உறுதிப்படுத்தாமல் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:நம் உயிர் காப்பாற்ற காவல் காக்கும் இந்திய வீரரின் புகைப்படம் இதுவா?
Fact Check By: Pankaj IyerResult: False
