பெட்ரோல், டீசலுக்கு ஜிஎஸ்டி வரி விதிக்கப்படாததற்கு மாநில அரசுகள் காரணமா?

சமூக ஊடகம் | Social

பெட்ரோல், டீசலுக்கு ஜிஎஸ்டி வரி விதிக்கப்படாததற்கு, மாநில அரசுகள்தான் காரணம், என்ற தலைப்பில் தினமலர் வெளியிட்ட வீடியோ, வைரலாகப் பரவி வருகிறது. இதன் உண்மைத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:
ஏன்�பெட்ரோல் டீசல் ஜி.எஸ்.டி.யில் வரவில்லை? | Petrol | Diesel price | GST #gst #petrol #diesel

Archived Link

ஏப்ரல் 4ம் தேதி இந்த பதிவு வெளியிடப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி வரி மற்றும் பெட்ரோல், டீசல் விலை போன்ற வார்த்தைகள் இருப்பதன் காரணமாக, பலரும் இதனை வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:
இந்த வீடியோவில் ஆடிட்டர் சேகர் என்பவர் பேசுகிறார். அவர், பெட்ரோல், டீசலுக்கு சேவை வரி விதிப்பதால், மத்திய அரசுக்கு பெரிய அளவில் நன்மை கிடையாது என்றும், இதன்மூலமாக, மாநில அரசுகளுக்கு, 18 முதல் 40 சதவீதம் வரை சேவை வரி வருமானம் கிடைக்கிறது என்றும் அவர் கூறுகிறார். மேலும், பெட்ரோல், டீசலுக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பதற்கு, மாநில அரசுகள் தொடர்ந்து முட்டுக்கட்டை போடுகின்றன, இவ்வாறு ஜிஎஸ்டி வரி எரிபொருட்களுக்கு விதிக்கப்பட்டால், அவற்றின் விலை தானாக, குறைந்துவிடும் என, அவர் மேலும் சுட்டிக்காட்டுகிறார்.

இதன்பேரில், கூகுளில், ஆதார செய்திகள் கிடைக்கிறதா என தேடிப்பார்த்தோம். பல்வேறு வகையான பொருட்களுக்கு ஜிஎஸ்டி விதிக்கப்பட்ட போதிலும், பெட்ரோலிய பொருட்களுக்கு இதுவரை ஜிஎஸ்டி விதிக்கப்படவில்லை என தகவல் கிடைத்தது. அத்துடன், பெட்ரோலிய பொருட்கள் விற்பனை மூலமாகக் கிடைக்கும் வருமான ஆதாரத்தை இழக்க விரும்பாமல், மாநில அரசுகளே இந்த விவகாரத்தில் தடை போடுவதாக தெரியவந்தது. இதுபற்றிய செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

ஏன் அவ்வாறு பெட்ரோல், டீசலுக்கு ஜிஎஸ்டி வரி விதிக்கப்படாமல் இழுத்தடிக்கப்படுகிறது என காரணம் தேடினோம். இதுபற்றி எகனாமிக் டைம்ஸ் வெளியிட்ட ஒரு செய்தி ஆதாரம் கிடைத்தது.  

அதில், மத்திய எண்ணெய்த்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், மாநில அரசுகளின் ஒப்புதல் இல்லாமல், பெட்ரோலிய பொருட்களுக்கு ஜிஎஸ்டி விதிப்பது, கடினமான செயல் என, தெரிவித்துள்ளார்.

C:\Users\parthiban\Desktop\gst 2.png

இதுபற்றி நிதித்துறை அமைச்சகம் ஏதேனும் கருத்து வெளியிட்டுள்ளதா என தேடிப் பார்த்தோம். அதில், நிதித்துறை இணையமைச்சர் இதேபோல, மாநில அரசுகள் பெட்ரோலிய பொருட்களுக்கு ஜிஎஸ்டி விதிக்கவிடாமல் கூறிய செய்தி ஆதாரமும் கிடைத்தது.

C:\Users\parthiban\Desktop\gst 3.png

எனவே, ஜிஎஸ்டி வரியை அமல்படுத்தும் முன்பாக, ஜிஎஸ்டி கவுன்சில் மூலமாக, மாநில அரசுகளின் கருத்தை, மத்திய அரசு கேட்டுள்ளது. அதில், பலரும் தங்களது வரி வருமானம் பாதிக்கப்படும் என எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுதவிர, அவ்வப்போது ஜிஎஸ்டி வரிவிதிப்பின்கீழ் பெட்ரோல், டீசலை கொண்டுவர மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு வருவதாகவும், இதற்கு மாநில அரசுகள் இணக்கம் காட்டாமல் இருப்பதாகவும், தெரியவருகிறது.

இதன்படி, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட ஃபேஸ்புக் பதிவு, உண்மையான தகவல்தான் என, உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:
உரிய ஆதாரங்களின்படி, மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு, உண்மையானதுதான் என நிரூபிக்கப்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில், இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளதால், மக்கள் பலரும் ஆதங்கத்துடன் இதனை ஷேர் செய்து வருகிறார்கள் என உணர முடிகிறது.

Avatar

Title:பெட்ரோல், டீசலுக்கு ஜிஎஸ்டி வரி விதிக்கப்படாததற்கு மாநில அரசுகள் காரணமா?

Fact Check By: Parthiban S 

Result: True