
‘’காந்தியை கோட்சே சுட்டுக் கொன்றபோது எடுத்த புகைப்படம்,’’ என்ற தலைப்பில் பகிரப்படும் ஒரு பதிவை ஃபேஸ்புக்கில் காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
இந்த பதிவில், சில புத்தக ஆதாரங்களை மேற்கோள் காட்டி, காந்தி படுகொலை பற்றி நீண்ட கட்டுரை எழுதப்பட்டுள்ளது. அத்துடன், காந்தி சுட்டுக் கொல்லப்பட்டபோது எடுத்த புகைப்படம் என்று கூறி ஒரு புகைப்படமும் இணைக்கப்பட்டுள்ளது.
இதனை பகிர்ந்துள்ள நபர், பல ஆண்டுகளாகவே, இதனை அடிக்கடி மறுபகிர்வு செய்து வருவதை காண முடிகிறது.
உண்மை அறிவோம்:
மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் இடம்பெற்றுள்ள கருத்துகள் பற்றியோ, அதற்கு ஆதாரமாகக் கூறப்பட்டுள்ள புத்தகங்கள் பற்றியோ நமக்கு சந்தேகம் இல்லை. ஆனால், திரும்ப திரும்ப ஒரே புகைப்படத்தை இந்த நபர் மறுபகிர்வு செய்துவருவதால், அதனை பார்க்கும் சமூக ஊடக பயனாளர்கள், இது உண்மையான புகைப்படம்தான் போல, என்று நினைத்து குழப்பமடைய வாய்ப்புள்ளது.
அத்துடன், மகாத்மா காந்தி படுகொலை விவகாரம் இந்திய அரசியலில் ஏற்பட்ட மிகப்பெரிய விசயமாகும். எனவே, அதுதொடர்பான தகவல், புகைப்படங்களின் உண்மைத்தன்மையை பரிசோதிக்க மிக அவசியம் என்றே நாம் கருதுகிறோம்.
அதன் அடிப்படையில் பார்த்தால், மேற்கண்ட பதிவில் நம்பகத்தன்மை இல்லை என தெரியவருகிறது. அதாவது, ஒரு தவறான புகைப்படத்தை முன்னுதாரணமாக வைத்து, இந்த பதிவை பல ஆண்டுகளாகவே மறுபகிர்வு செய்து வருகின்றனர்.
உண்மையில், இந்த புகைப்படம், ஒரு திரைப்பட காட்சியுடன் தொடர்புடையதாகும்.
இதன்படி, கடந்த 1963ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட ‘’Nine Hours to Rama‘’ என்ற படத்தில் வரும் காட்சிதான் மேற்கண்ட பதிவில் இடம்பெற்றுள்ள புகைப்படம். அதில் இருப்பவர்கள் நடிகர்கள் மட்டுமே, உண்மையான கோட்சே, காந்தி இல்லை.
இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவுகளில், தவறான புகைப்படம் உள்ளதாக சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
இந்த புகைப்படம் பற்றி எமது ஆங்கில பிரிவு ஏற்கனவே உண்மை கண்டறியும் சோதனை செய்து முடிவுகளை சமர்ப்பித்துள்ளது. அதனை படிக்க இங்கே (Fact Crescendo English Story Link) கிளிக் செய்யவும். இதேபோல, காந்தி பெண் ஒருவருடன் நடனம் ஆடுவதாக பரவிய வதந்தி பற்றி படிக்க இங்கே (Fact Crescendo Tamil Story Link ) கிளிக் செய்யுங்கள்.
முடிவு:
உரிய ஆதாரங்களின்படி நாம் ஆய்வு செய்த ஃபேஸ்புக் பதிவில் தவறான புகைப்படம் உள்ளதாக நிரூபித்துள்ளோம். நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம், வீடியோ போன்றவற்றை காண நேரிட்டால், எமது வாட்ஸ்ஆப் எண்ணிற்கு (+91 9049044263) அனுப்பி வைக்கும்படி கேட்டுக் கொள்கிறோம்.

Title:காந்தியை கோட்சே சுட்டுக் கொன்றபோது எடுத்த புகைப்படம் இதுவா?
Fact Check By: Pankaj IyerResult: Partly False
