உதய சூரியன் சின்னத்துடன் கன்றுக்குட்டி?- இது தமிழ் நாட்டைச் சேர்ந்ததா?

அரசியல் | Politics இலங்கை

‘’கன்றுக்குட்டி ஒன்றின் உடலில் உதய சூரியன் சின்னத்தை வரைந்த திமுகவினர்,’’ என்று கூறி சமூக ஊடகங்களில் பகிரப்படும் புகைப்படம் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.

தகவலின் விவரம்: 

Facebook Claim LinkArchived Link

இந்த பதிவை பலர் திமுகவுடன் தொடர்புபடுத்தி கமெண்ட் பகிர்வதால், இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்ய வேண்டியுள்ளது. 

உண்மை அறிவோம்:
இந்த பதிவில் கூறியுள்ள தகவல் உண்மையா என்ற சந்தேகத்தில் தகவல் தேடியபோது, இதேபோல மேலும் சிலர் பதிவு வெளியிட்ட விவரமும் காணக் கிடைத்தது. கமெண்ட்களில், திமுக, அதிமுக, பாஜக என்று மாறி மாறி ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டிக் கொள்வதையும் காண முடிந்தது. 

Facebook Claim Link 1Archived Link 1

இதுபற்றி மேலும் தீவிரமாக தகவல் தேடியபோது, இந்த புகைப்படம் இலங்கையில் சமீபத்தில் நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தலுடன் தொடர்புடையது என்ற விவரம் கிடைத்தது.

Archived Link

இதன்படி, இலங்கையின் மட்டக்களப்பு பகுதியில் உள்ள ஊரணி என்ற இடத்தில் வாக்குச் சாவடி ஒன்றின் முன்பாக, இவ்வாறு கன்றுக்குட்டி ஒன்றின் உடலில், சூரியன் சின்னத்தை செதுக்கி வைத்துவிட்டு, சிலர் சென்றுள்ளனர். இதனைக் கண்ட பொதுமக்கள் உடனடியாக, அந்நாட்டின் விலங்குகள் நலவாரியத்திற்கு தகவல் கூறியுள்ளனர்.

இந்த தகவலை முதலில் Streets Of Tamileelam என்ற ட்விட்டர் ஐடி பகிர்ந்துவிட்டு, பிறகு அதிலேயே தகவலை சரிசெய்து, மறுபதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளது.

இதையடுத்து, இலங்கையில் சூரியன் சின்னத்தில் தற்போது நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் யாரும் போட்டியிட்டனரா என விவரம் சேகரித்தோம். அப்போது, இலங்கை தேர்தல் ஆணையம் வெளியிட்டிருந்த தேர்தல் சின்னங்களில், சூரியன் சின்னமும் இடம்பெற்றிருந்ததை கண்டோம். 

Elections.gov.lk Link

தமிழர் ஐக்கிய முன்னணி என்ற கூட்டணி, இலங்கை 2020 பொதுத் தேர்தலில் மட்டக்களப்பு உள்ளிட்ட பகுதிகளில் சூரியன் சின்னத்தில் போட்டியிடுவதாக அறிவித்திருந்தது. இந்த கன்றுக்குட்டி கண்டெடுக்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்ததும் மட்டக்களப்பு பகுதியில்தான் உள்ளது. எனவே, இதை வைத்துப் பார்த்தால், இது தமிழ்நாட்டுடன் தொடர்பில்லாதது என்று தெளிவாகிறது.

Newsfirst lk LinkTamilwin Link

முடிவு:
உரிய ஆதாரங்களின்படி நாம் ஆய்வு செய்த ஃபேஸ்புக் பதிவில் உள்ள புகைப்படம் உண்மையானதுதான்; ஆனால், இச்சம்பவம் இந்தியாவில் நடக்கவில்லை; இலங்கையில் நடந்ததாகும். இதுபோன்ற நம்பகத்தன்மை இல்லாத செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை நமது வாசகர்கள் கண்டால் +91 9049044263 என்ற வாட்ஸ்ஆப் எண்ணில் தகவல் தெரிவியுங்கள்.

Avatar

Title:உதய சூரியன் சின்னத்துடன் கன்றுக்குட்டி?- இது தமிழ் நாட்டைச் சேர்ந்ததா?

Fact Check By: Pankaj Iyer 

Result: Partly False