மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் ப.ரங்கநாதனா? – குழம்பிய விகடன்!

சமூக ஊடகம் | Social சமூகம்

மயிலாடுதுறை எம்.பி படத்துக்கு பதில் வில்லிவாக்கம் எம்.எல்.ஏ ரங்கநாதன் படத்தை வெளியிட்டு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது விகடன்.

தகவலின் விவரம்:

Vikatan 2.png

Facebook Link I Archived Link 1 I News Link ! Archived Link 2

தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களின் சொத்து விவரம், கல்வித் தகுதி, குற்றப் பின்னணி உள்ளிட்ட தகவலைத் திரட்டி போட்டோ ஸ்டோரியாக விகடன் டாட் காம் வெளியிட்டுள்ளது. அதில் உள்ள புகைப்படங்கள் தனித்தனியாகவும் பலரால் பகிரப்பட்டு வருகிறது. மயிலாடுதுறை எம்.பி பற்றிய தகவலும் அதில் இடம் பெற்றுள்ளது.

“உங்கள் எம்.பியின் கல்வித் தகுதி என்ன? சொத்து மதிப்பு என்ன?” என்ற நிலைத் தகவலுடன் யுஆர்லிங்கை Vikatan EMagazine என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர். 2019 மே 31ம் தேதி பகிரப்பட்டுள்ள இந்த செய்தியை பலரும் பகிர்ந்துள்ளனர்.

உண்மை அறிவோம்:

தமிழகத்தில் இருந்து வெற்றிபெற்ற 38 நாடாளுமன்ற உறுப்பினர்களின் பின்னணி விவரங்களை தொகுத்து போட்டோ கார்டாக பகிர்ந்துள்ளனர். அதில், மயிலாடுதுறை எம்.பி பற்றிய போட்டோ கார்டில் வில்லிவாக்கம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் ப.ரங்கநாதன் படம் இருந்தது. ஆனால், அந்த போட்டோ கார்டில் பாராளுமன்றத் தொகுதி – மயிலாடுதுறை, வெற்றி பெற்றவர் செ.ராமலிங்கம் என்று இருந்தது.

Vikatan 3.png

மயிலாடுதுறை எம்.பி செ.ராமலிங்கத்தின் புகைப்படம் அவர் சார்ந்த கட்சியின் அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் உள்ளதா என்று தேடினோம். அப்போது அவர் புகைப்படம் நமக்கு கிடைத்தது. 

Vikatan 4.png

மேலும், நம்முடைய தேடலில் செ.ராமலிங்கம் நாடாளுமன்ற உறுப்பினராக பதவி ஏற்ற வீடியோவும் கிடைத்தது.

Archived Link

அதேபோல், தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியலை ஆய்வு செய்தோம். அதில், ப.ரங்கநாதன் புகைப்படம் நமக்கு கிடைத்தது. மேலும் ரங்கநாதனின் ஃபேஸ்புக் முகவரியும் நமக்கு கிடைத்தது. அதில் உள்ள படங்களை ஒப்பிட்டுப் பார்த்தால் விகடன் வெளியிட்ட போட்டோ கார்டில் படத்தை மாற்றி வெளியிட்டது உறுதியாகிறது.

Vikatan 5.png

இதன் மூலம், செ.ராமலிங்கம் புகைப்படத்தை வைப்பதற்கு பதிலாக, ப.ரங்கநாதன் படத்தைப் பதிவிட்டு செய்தி தயாரித்துள்ளது உறுதியானது. 

மேலும், போட்டோ கார்டில் உள்ள தகவல் எல்லாம் சரிதானா என்று ஆய்வு செய்தோம். அவருடைய சொத்து மதிப்பு ரூ.1.33 கோடி என்று குறிப்பிட்டிருந்தார். ஆனால், நியூஸ் கார்டில் ரூ.1 கோடி என்று இருந்தது. 

Vikatan 6.png

நம்முடைய ஆய்வில்,

மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் என்று குறிப்பிட்டுள்ள படத்தில் இருப்பது செ.ராமலிங்கம் இல்லை என்பது உறுதியாகி உள்ளது.

ராமலிங்கம் நாடாளுமன்ற உறுப்பினராக பதவி ஏற்ற புகைப்படம் கிடைத்துள்ளது.

செ.ராமலிங்கம் மற்றும் ப.ரங்கநாதன் ஆகியோர் புகைப்படங்கள் அவர்கள் சார்ந்துள்ள தி.மு.க-வின் அதிகாரப்பூர்வ இணையதளத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில், படத்தில் இருப்பவர் செ.ராமலிங்கம் இல்லை என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு உண்மையான தகவலுடன் தவறான தகவலும் சேர்த்து பகிரப்பட்டுள்ளது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் ப.ரங்கநாதனா? – குழம்பிய விகடன்!

Fact Check By: Chendur Pandian 

Result: Mixture