
‘’எடியூரப்பாவுக்கு 75 வயதாகிவிட்டதால் முதல்வராக பதவி ஏற்க முடியாது,’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை செய்ய தீர்மானித்தோம்.
தகவலின் விவரம்:
இந்த பதிவு கடந்த ஜூலை 27ம் தேதி வெளியிடப்பட்டுள்ளது. இதில், எடியூரப்பாவுக்கு, 75 வயதாகிவிட்டதால் முதலமைச்சராக முடியாது என்று கூறியுள்ளனர்.
உண்மை அறிவோம்:
குறிப்பிட்ட நபர் இந்த பதிவை ஜூலை 27ம் தேதி வெளியிட்டுள்ளார். ஆனால், எடியூரப்பா ஜூலை 26ம் தேதியே எடியூரப்பா, கர்நாடகா முதலமைச்சராக பதவியேற்றுவிட்டார்.
இதுபற்றிய செய்தியை படிக்க இங்கே மற்றும் இங்கே கிளிக் செய்யவும். மேலும், பாஜக.,வில் 75 வயதுக்கு மேல் யாருக்கும் பதவி தரப்படாது என்றெல்லாம் எதுவும் விதிமுறை இல்லை. கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது, அத்தகைய புது வியூகத்தை பின்பற்றி 75 வயதான நபர்களை ஓரங்கட்டி நடுத்தர வயதினருக்கு பாஜக அதிகளவில் வாய்ப்பு அளித்தது உண்மைதான். ஆனால், அது தேர்தலுக்கு தேர்தல் மாறுபடக்கூடிய நடைமுறையாகும். இதேபோல, அத்வானி போன்ற சில மூத்த தலைவர்களை ஓரங்கட்டியது அவர்களின் உள்கட்சி விவகாரம். அதை வைத்து, நாம் எந்த தனிப்பட்ட முடிவும் செய்ய முடியாது. இதுதொடர்பான செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.
எனவே, ஜூலை 26ம் தேதியே எடியூரப்பா பதவியேற்ற நிலையில், ஜூலை 27ம் தேதி இந்த பதிவை வெளியிட்டதால் தவறானது என உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
இதுவரை கிடைத்த ஆதாரங்களின்படி மேற்கண்ட ஃபேஸ்புக் செய்தி தவறான ஒன்று என நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள் இத்தகைய செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:எடியூரப்பாவுக்கு 75 வயதாகிவிட்டதால் முதலமைச்சர் ஆக முடியாதா?
Fact Check By: Pankaj IyerResult: False
