ஜொலி ஜொலிக்கும் தங்கப் பிள்ளையார் சிலை; மும்பையில் வைக்கப்பட்டதா?

ஆன்மீகம் சமூக ஊடகம் | Social

‘’மும்பையில் வைக்கப்பட்ட ஜொலி ஜொலிக்கும் தங்கப் பிள்ளையார் சிலை,’’ என்று கூறி பகிரப்படும் வீடியோ பதிவு ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்: 

Facebook Claim LinkArchived Link

கடந்த ஜூலை மாதம் பகிரப்பட்டுள்ள இந்த ஃபேஸ்புக் பதிவில், தங்கத்தில் ஜொலி ஜொலிக்கும் விநாயகர் சிலை ஒன்று பற்றிய வீடியோ இடம்பெற்றுள்ளது. அந்த வீடியோவில் வரும் விநாயகர் பற்றி, ‘’70 கிலோ தங்கம், 350 கிலோ வெள்ளி மற்றும் ரூ.264 மதிப்பு,’’ எனக் குறிப்பிடுகின்றனர்.  

இந்த வீடியோ பதிவை பலரும் உண்மை என நம்பி, ஷேர் செய்து வருகின்றனர். 

உண்மை அறிவோம்:
குறிப்பிட்ட வீடியாவில் காட்டப்படும் சிலை மும்பையில்தான் உள்ளதா எனும் சந்தேகத்தில் தகவல் தேடினோம். அப்போது, இந்த சிலை பற்றிய வீடியோ கடந்த சில ஆண்டுகளாகவே, சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருவதாக தெரியவந்தது. ஆனால், இந்த சிலை மும்பையில் உள்ளதா என்று பார்த்தால் இல்லை என்பதே உண்மை.

நீண்ட நேரம் தேடியும் இது எங்கே வைக்கப்பட்ட சிலை என்ற விவரம் கிடைக்கவே இல்லை.

சிலர் இதனை மும்பையில் உள்ளது என்றும், சிலர் இதனை பெங்களூருவில் உள்ளது என்றும் கூறி தகவல் பகிர்ந்து வருகின்றனர்.

ஆனால், மும்பையில் உள்ள விநாயகர் சிலைகளில், தங்கத்தில் செய்யப்பட்ட விநாயகர் சிலை என்று பார்த்தால், GSB Seva Mandal பகுதியில் உள்ளது மட்டும்தான் என தெரியவருகிறது. அந்த சிலை பார்ப்பதற்கு வேறு ஒன்றாக உள்ளது. இந்த சிலைதான் இவர்கள் குறிப்பிடுவது போன்று 70 கிலோ தங்கம் மற்றும் 350 கிலோ வெள்ளி நகைகளுடன் கூடியதாகும். இதனை ரூ.266 கோடிக்கு இன்சூரன்ஸ் செய்துள்ளனர்.

இதுதவிர மும்பையில் உள்ள பிரபலமான விநாயகர் சிலைகள் பற்றி படிக்க இங்கே கிளிக் செய்யவும். அவற்றில் ஒரு சிலை கூட நாம் ஆய்வு செய்யும் ஃபேஸ்புக் பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவுடன் ஒத்ததாக இல்லை.

இது மட்டுமின்றி புனே பகுதியில் முற்றிலும் தங்கத்தில் செய்யப்பட்ட விநாயகர் சிலை ஒன்று உள்ளதாகவும் விவரம் கிடைத்தது. அதுவும் வேறு ஒன்றாக உள்ளது.

எவ்வளவு தேடினாலும், இந்த ஃபேஸ்புக் பதிவுகளில் வரும் தங்க விநாயகர் சிலை எங்கே உள்ளது எனக் கண்டறிய முடியவில்லை. ஆனால், இவர்கள் குறிப்பிடுவது போல, 70 கிலோ தங்கம், 350 கிலோ வெள்ளி மற்றும் ரூ.264 கோடி மதிப்பு என உள்ள ஒரே விநாயகர் சிலை மும்பை GSB Seva Mandal பகுதியில் உள்ளது மட்டும்தான்.

எனவே, தவறான தகவலுடன் வேறு ஒரு விநாயகர் சிலை பற்றிய வீடியோவை சேர்த்து பகிர்ந்துள்ளனர் என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:
உரிய ஆதாரங்களின்படி நாம் ஆய்வு செய்த ஃபேஸ்புக் பதிவில் தவறான தகவல் உள்ளதாக நிரூபித்துள்ளோம். நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:ஜொலி ஜொலிக்கும் தங்கப் பிள்ளையார் சிலை; மும்பையில் வைக்கப்பட்டதா?

Fact Check By: Pankaj Iyer 

Result: False