
சமூக ஊடகங்களில் #ReleaseNandhini என்ற பெயரில் டிரெண்டிங் ஆகும் ஹேஷ்டேக் ஆவதாகக்கூறி, நியூஸ்18 சேனல் ஒரு ஃபேஸ்புக் பதிவை வெளியிட்டிருந்தது. அந்த செய்தியை பலரும் வைரலாக பகிர்ந்து வருவதால், நாமும் இதுபற்றி உண்மை கண்டறிய தீர்மானித்தோம்.
தகவலின் விவரம்:

News18 Tamil Nadu இந்த செய்தியை பகிர்ந்துள்ளது. பலரும் இதனை வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில், நியூஸ்18 இணையதள செய்தி ஒன்றின் லிங்க் பகிரப்பட்டுள்ளது. அந்த செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.
இச்செய்தியின் உள்ளே, வரும் ஜூலை 5ம் தேதி திருமணம் நடக்கவிருந்த நிலையில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் வழக்கறிஞர் நந்தினி கைது செய்யப்பட்டதாகவும், அவரை ஜூலை 9ம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இப்படி எதுவும் நடந்ததா என கூகுளில் தேடிப் பார்த்தோம். அப்போது நிறைய செய்தி ஆதாரங்கள் கிடைத்தன. அதில், நியூஸ்18 செய்தியும் இடம்பெற்றிருந்தது.

அதாவது, டாஸ்மாக் கடைகளுக்கு எதிராகப் போராடி வரும் வழக்கறிஞர் நந்தினி மீது திருப்பத்துர் நீதிமன்றத்தில் 2014ம் ஆண்டு நடைபெற்ற போராட்டம் தொடர்பான வழக்கு விசாரணை, ஜூன் 27ம் தேதி நிகழ்ந்துள்ளது. அந்த வழக்கின் விசாரணையின்போது, ஐபிசி 328 சட்டத்தின்படி, டாஸ்மாக் மூலம் போதைப் பொருள் விற்பது குற்றமில்லையா, என நந்தினி, நீதிபதியிடம் கேள்வி கேட்டதாகக் கூறப்படுகிறது. இதன்பேரில், அவருக்கும், அவரது தந்தைக்கும் நீதிமன்ற அவமதிப்பு செய்ததாக, சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. எனவே, நாம் ஆய்வு செய்யும் செய்தியில் உள்ள தகவல் உண்மைதான். இதுபற்றி புதிய தலைமுறை வெளியிட்ட செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.
ஜூலை 5ம் தேதி திருமணம் நிகழ உள்ள நிலையில், ஜூலை 9ம் தேதி வரை அவரை சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளது பலதரப்பிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன்பேரில்தான், சமூக ஊடகத்தில் பலரும் எதிர்ப்பை பதிவு செய்யும் விதமாக, #ReleaseNandhini என்ற ஹேஷ்டேக்கை, ஜூன் 28 அன்று டிரெண்டிங் செய்திருக்கிறார்கள். இதனை ட்விட்டர் சென்றால் காண முடிகிறது. ஏராளமானோர் இதுபற்றி பதிவு வெளியிட்டுள்ளனர்.

மேலும், இதுதொடர்பான ட்விட்டர் பதிவுகளை பார்க்க, இங்கே கிளிக் செய்யவும்.
எனவே, மேற்கண்ட செய்தி உண்மையான ஒன்றுதான் என உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின்படி, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட ஃபேஸ்புக் தகவல் உண்மையான ஒன்றுதான் என நிரூபிக்கப்பட்டுள்ளது. சமகால அரசியல் நிகழ்வு என்பதால், பலரும் இதனை வைரலாக பகிர்ந்துவருவதை உணர முடிகிறது.
