உதயநிதி ஸ்டாலின் 72000 கிமீ பிரசாரப் பயணம் செய்ததாகச் சொன்னாரா?

அரசியல்

‘’உதயநிதி ஸ்டாலின் 72000 கிமீ பிரசாரப் பயணம் செய்தேன்,’’ என்று உதயநிதி ஸ்டாலின் கூறியதாக, ஒரு வைரல் ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை செய்ய தீர்மானித்தோம்.

தகவலின் விவரம்:

C:\Users\parthiban\Desktop\udhayanidhi 2.png

Facebook Link I Archived Link

Tamil The Hindu இந்த பதிவை கடந்த ஏப்ரல் 17, 2019 அன்று வெளியிட்டுள்ளது. இதில், தங்களது இணையதளத்தில் வெளியான செய்தியின் லிங்கை இணைத்துள்ளனர். அந்த செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

C:\Users\parthiban\Desktop\udhayanidhi 3.png

உண்மை அறிவோம்:
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில், உதயநிதி ஸ்டாலின் தமிழகம் முழுக்க திமுக மற்றும் அதன் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டார். இந்த பிரசார பயணம் முடிந்தபின் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் இதுபற்றி பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.

இந்த பதிவில், 26 நாட்களில் தமிழகம் முழுக்க சுமார் 7200 கிமீ வரை சுற்றுப்பயணம் செய்து, பிரசாரம் செய்ததாகக் குறிப்பிட்டிருந்தார்.

இச்செய்தியை தமிழ் இந்து தவறாக, 72000 கிமீ என குறிப்பிட்டு செய்தி வெளியிட்டிருக்கிறது. இதன்படி, ஏப்ரல் 17, 2019 அன்று வெளியான தமிழ் இந்து செய்தியை பலரும் சமூக ஊடகங்களில் வைரலாக ஷேர் செய்ய தொடங்கியதால், தனது தவறை உணர்ந்து, 7200 என இணையதள செய்தியில் ஏப்ரல் 22, 2019 அன்று திருத்தம் செய்துவிட்டதாக, தெரிகிறது. ஆனால், தங்களது தவறை அவர்களால் முழுதாக மறைக்க முடியவில்லை. ஆம். தங்களது குழுமத்தைச் சேர்ந்த காமதேனு இணையதளத்தில் இதே செய்தியை 72000 கிமீ என குறிப்பிட்டு வெளியிட்டுள்ளனர். அந்த செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

C:\Users\parthiban\Desktop\udhayanidhi 4.png

Archived Link

தமிழ் இந்து தனது இணையதள செய்தியை திருத்திக் கொண்டாலும், காமதேனு தனது தவறை திருத்திக் கொள்ளவில்லை. அதேசமயம், தமிழ் இந்துவின் ஃபேஸ்புக் பதிவில் இன்னமும் 72000 கிமீ என்றே குறிப்பிட்டுள்ளனர். இது தவறான செய்தி என்று கூட தெரியாமல் பலரும் சமூக ஊடகங்களில் வைரலாக பகிர்ந்து, உதயநிதி ஸ்டாலினை விமர்சித்து வருகின்றனர்.

C:\Users\parthiban\Desktop\udhayanidhi 5.png

இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில், தமிழ் இந்து முதலில் தவறாகச் செய்தி வெளியிட்டுவிட்டு, பின்னர் அதனை மாற்றிக் கொண்டதாக, தெரியவருகிறது. ஆனால், தனது ஃபேஸ்புக் பதிவில் இன்னமும் மாற்றம் செய்யாமல் அப்படியே வைத்துள்ளனர். இதனால், ஃபேஸ்புக் பயனாளர்கள் இதனை உண்மை என நம்பி, ஷேர் செய்து வருகின்றனர்.

எனவே, இந்த செய்தியின் தலைப்பு தவறு என முடிவு செய்யப்படுகிறது. அத்துடன் இந்த செய்தியின் உண்மை தெரியாமல் 72000 கிமீ என ஃபேஸ்புக் பயனாளர்கள் ஷேர் செய்வது தவறு என்றும் குறிப்பிட விரும்புகிறோம்.

முடிவு:
உரிய ஆதாரங்களின்படி நாம் ஆய்வு செய்த ஃபேஸ்புக் செய்தியின் தலைப்பு தவறு என நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:உதயநிதி ஸ்டாலின் 72000 கிமீ பிரசாரப் பயணம் செய்ததாகச் சொன்னாரா?

Fact Check By: Pankaj Iyer 

Result: False Headline