வாஜ்பாய்க்காக போஸ்டர் ஒட்டிய வெங்கையா நாயுடு! – தந்தி டி.வி நியூஸ் கார்டு உண்மையா?

அரசியல் | Politics சமூக ஊடகம் | Social

ஆந்திராவுக்கு வாஜ்பாய் வந்தபோது அவருக்காக போஸ்டர் ஒட்டிய நான், பின்னாளில் அவருக்கு அருகில் கட்சித் தலைவராக அமர்ந்தேன் என்று வெங்கையா நாயுடு கூறியதாக தந்தி டி.வி நியூஸ் கார்டு ஒன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Venkaiah 2.png

Facebook Link I Archived Link

தந்தி டி.வி நியூஸ் கார்டு மற்றும் தமிழ்த் திரைப்பட காட்சி இணைக்கப்பட்டு போட்டோ கார்டு உருவாக்கப்பட்டுள்ளது. தந்தி டி.வி நியூஸ் கார்டில், “ஆந்திராவுக்கு வாஜ்பாய் வந்தபோது அவருக்காக போஸ்டர் ஒட்டிய நான், பின்னாளில் அவருக்கு அருகில் கட்சித் தலைவராக அமர்ந்தேன் – வெங்கய்ய நாயுடு” என்று உள்ளது. ஆகஸ்ட் 11, 2019ம் தேதி இந்த நியூஸ் கார்டு வெளியானதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நடிகர் வினு சக்ரவர்த்தி காதை மூடிக்கொள்ளும் திரைப்பட காட்சி கீழே தனியாக இணைக்கப்பட்டுள்ளது. நடிகர் வினு சக்ரவர்த்தி படத்தின் மீது, உபி என்று எழுதப்பட்டுள்ளது. படத்துக்குக் கீழே, “எங்க தாத்தா காலத்துல இருந்தே திமுகவுக்கு போஸ்டர் ஒட்டுறோமே டா” என்று போட்டோ ஷாப்பில் எழுதப்பட்டு இருந்தது.

இந்த பதிவை, நாச்சியார் தமிழச்சி என்ற ஃபேஸ்புக் பக்கம் ஆகஸ்ட் 11, 2019 அன்று வெளியிட்டுள்ளது. பலரும் இதைப் பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

வெங்கையா நாயுடு தொடர்பாக தந்தி டி.வி வெளியிட்ட நியூஸ் கார்டு அசல் போலத் தெரியவில்லை. தமிழ் ஃபாண்ட் வித்தியாசமாக இருந்தது. எனவே, ஆகஸ்ட் 11ம் தேதி தந்தி டி.வி வெங்கையா நாயுடு தொடர்பாக நியூஸ் கார்டு வெளியிட்டதா என்று அதன் ஃபேஸ்புக் பக்கத்தில் ஆய்வு செய்தோம்.

Venkaiah 3.png

அப்போது, இரண்டு நியூஸ் கார்டுகள் கிடைத்தன. ஒரு நியூஸ் கார்டில், “மோடி அரசின் நடவடிக்கைகளை உலகமே உன்னிப்பாக கவனிக்கிறது- வெங்கய்ய நாயுடு” என்று இருந்தது. மற்றொரு நியூஸ் கார்டில், “அரசியலில் ஓய்வுபெற்றாலும், மக்கள் நலவாதியாக ஓய்வு பெறவில்லை – வெங்கய்ய நாயுடு” என்று இருந்தது.

Archived Link

Archived Link

ஆனால், அதில், மேலே ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட ஃபேஸ்புக் பதிவில் உள்ளது போன்று எதுவும் குறிப்பிடவில்லை. இதன் அடிப்படையில், இந்த நியூஸ் கார்டு போலியாக சித்தரிக்கப்பட்டது என்பது உறுதியானது.

இருப்பினும் உண்மையில் வெங்கையா நாயுடு இவ்வாறு பேசினாரா, அதை வைத்து இவர்கள் தந்தி டி.வி நியூஸ் கார்டை பயன்படுத்தி தகவலை வெளியிட்டுள்ளார்களா என்று ஆய்வு செய்தோம்.

ஆகஸ்ட் 11ம் தேதி வெங்கையா நாயுடு எழுதிய புத்தகம் சென்னையில் வெளியிடப்பட்டது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இந்த புத்தகத்தை வெளியிட்டார். விழாவில், தமிழக ஆளுநர், முதல்வர், நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். அந்த நிகழ்ச்சியின் செய்தியைப் படித்துப் பார்த்தோம். எதிலும் வெங்கையா நாயுடு போஸ்டர் ஒட்டியதாக குறிப்பிடவில்லை.

Venkaiah 4.png

URL Link

தினத்தந்தி செய்தி

ஐஇ தமிழ் செய்தி

அந்த நிகழ்ச்சியின் வீடியோவை தேடினோம். ராஜ்யசபா டி.வி அந்த நிகழ்ச்சியில் வெங்கையா நாயுடு பேசியதை தன்னுடைய யூடியூப் பக்கத்தில் வெளியிட்டிருந்தது. அதைக் கேட்டோம். கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் வெங்கையா நாயுடு பேசினார். ஆங்கிலத்தில்தான் பேசினார். அவருடைய பேச்சின் 19வது நிமிடத்தில் வாஜ்பாய் பற்றிய மலரும் நினைவுகளை அவர் பகிர்ந்துகொண்டார்.

Archived Link

அவர் பேச்சின் தமிழாக்கம், “வாஜ்பாய் என்னுடைய பகுதிக்கு வரும்போது எல்லாம், ஜட்கா வண்டியில் மைக் கட்டி அறிவிப்பு செய்வேன். வாஜ்பாய் நெல்லூர் வரும்போது எல்லாம், “வாஜ்பாய் நெல்லூர் வருகிறார். இன்று மாலை 6 மணிக்குக் கூட்டுறவு வங்கி மைதானத்தில் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. கூட்டத்தில் கலந்துகொண்டு, கூட்டம் மிகப்பெரிய வெற்றிபெற உதவுங்கள்” என்று தெலுங்கில் அறிவிப்பேன்.

நான் மாணவர்த் தலைவனாக இருந்தேன். ஆனாலும், கட்சியைப் பற்றி, வாஜ்பாய் பற்றி சுவரில் எழுதுவேன். அப்படி சுவரில் எழுதிய, வாஜ்பாய் வருகையை அறிவித்த இளைஞன், ஆளுங்கட்சியின் தேசியத் தலைவராக அமருவான் என்றோ, வாஜ்பாய், அத்வானிக்கு நடுவில் அமர்ந்து கட்சியை வழிநடத்துவான் என்றோ நினைத்தது கூட இல்லை… இதுதான் கட்சி எனக்குக் கொடுத்த மிகப்பெரிய கவுரவம்” என்றார்.

நம்முடைய ஆய்வில்,

நம்முடைய ஆய்வில், தந்தி டி.வி மேற்கண்ட நியூஸ் கார்டை வெளியிடவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தந்தி டி.வி வெளியிட்ட நியூஸ் கார்டை எடிட் செய்து போலியாக நியூஸ் கார்டு வெளியிட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.

போஸ்டர் ஒட்டினேன் என்று வெங்கையா நாயுடு கூறியதாக எந்த ஒரு செய்தியும் வெளியாகவில்லை.

சென்னையில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் வெங்கையா நாயுடு பேசிய பேச்சு வீடியோ கிடைத்துள்ளது. 

வெங்கையா நாயுடு தன்னுடைய பேச்சில், “தான் சாதாரண போஸ்டர் ஒட்டும் நபராக கட்சியில் பணியை ஆரம்பித்தேன்” என்று கூறவில்லை. தன்னுடைய பேச்சில், “நான் மாணவர்த் தலைவனாக இருந்தேன். கட்சி பிரபலம் அடையாத நேரம், வட இந்திய கட்சி, பிரமணர்கள் கட்சி என்று எல்லோரும் ஒதுக்கிய நேரத்தில் வாஜ்பாய் வருகையை மைக்கில் அறிவித்தேன், கட்சி பற்றி சுவர்களில் எழுதினேன்” என்று கூறுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

சுவற்றில் எழுதியதைத்தான், சுவரொட்டி ஒட்டியதாக தவறாக மாற்றி குறிப்பிட்டுள்ளார்கள் என்றாலும், தந்தி டி.வி பெயரில் போலியாக நியூஸ் கார்டு தயாரித்தது தவறான செயலாகும்.

இந்த ஆதாரங்கள் அடிப்படையில், வாஜ்பாய் வந்தபோது அவருக்காக போஸ்டர் ஒட்டினேன் என்று வெங்கையா நாயுடு பேசியதாக தந்தி டி.வி பெயரில் வெளியான நியூஸ் கார்டு போலியானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:வாஜ்பாய்க்காக போஸ்டர் ஒட்டிய வெங்கையா நாயுடு! – தந்தி டி.வி நியூஸ் கார்டு உண்மையா?

Fact Check By: Chendur Pandian 

Result: False