ரானு மோண்டல் மேக்அப் புகைப்படம் உண்மையா?

சமூக ஊடகம் | Social பாலிவுட்

‘’ரானு மோண்டல் மேக்அப் புகைப்படம்,’’ என்ற தலைப்பில் பகிரப்படும் ஒரு வைரல் புகைப்படத்தைக் காண நேரிட்டது. அதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.

தகவலின் விவரம்:

Facebook Claim LinkArchived Link 

இதே செய்தியை Star Tamils என்ற இணையதளமும் பகிர்ந்திருந்தது. 

Facebook Link Archived Link Star Tamils News LinkArchived Link 

உண்மை அறிவோம்:
மேற்கு வங்கம் மாநிலம், ரானாகத் பகுதி ரயில் நிலையத்தில் பாட்டு பாடி பிச்சை எடுத்து வந்தவர் ரானு மரியா மோண்டல். அவர் இந்தி பாடல் ஒன்றை பாடும்போது ரயில் பயணி ஒருவர் வீடியோவாக எடுத்து, சமூகஊடகங்களில் பகிர அந்த வீடியோ வைரல் ஆனது. இதையடுத்து Superstar Singer என்ற ரியாலிட்டி டிவி நிகழ்ச்சியில் அவருக்கு சிறப்பு விருந்தினராக பங்கேற்க வாய்ப்பு தரப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் அவர் ‘’Ek Pyaar Ka Nagma hai,’’ என்ற பாடலை பாட, அதைக் கண்டு மெய்மறந்த பாலிவுட் இசையமைப்பாளர் ஹிமேஷ் ரேஸ்மியா இந்தி படம் ஒன்றில் பாடும் வாய்ப்பை வழங்கினார். தற்சமயம், பிரபல பாடகியாக ரானு மோண்டல் வலம் வருகிறார்.

இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ரானு மோண்டல் பளபளவென செய்துகொண்ட மேக்அப் இது என்று கூறி மேற்கண்ட புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. இதன்பேரில் ஏற்கனவே பல ஊடகங்களும் உண்மை கண்டறியும் சோதனை செய்து முடிவுகளை சமர்ப்பித்துள்ளன. அத்துடன், ரானு மோண்டலுக்கு மேக் அப் செய்வித்த ஒப்பனைக் கலைஞர் சந்தியா இதுபற்றி அதிகாரப்பூர்வமாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். 

SandhyasMakeover Instagram Post Link 

இதேபோல, முன்னணி ஊடகங்கள் இந்த வைரல் புகைப்படம் பற்றி வெளியிட்ட செய்திகளின் இணைப்பு கீழே தரப்பட்டுள்ளது. 

IndiaTimes.com Link News18.com Link IndiaToday News Link TimesNow News Link

இதுகுறித்து நமது மராத்தி மொழிப் பிரிவும் உண்மை கண்டறியும் சோதனை செய்து, அதன் முடிவுகளை ஏற்கனவே சமர்ப்பித்துள்ளது.

FactCrescendo Marathi News Link

முடிவு:
நாம் ஆய்வு செய்த ஃபேஸ்புக் புகைப்படம் தவறான ஒன்று என ரானு மோண்டலுக்கு மேக்அப் செய்த ஒப்பனை கலைஞர் தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Title:ரானு மோண்டல் மேக்அப் புகைப்படம் உண்மையா?

Fact Check By: Pankaj Iyer