
‘’கன்னியாகுமரி என் குழந்தை. அங்கு பாஜக வெற்றி பெற்றதற்கு, அண்ணாமலை இனிஷியல் போடக்கூடாது,’’ எனக் குறிப்பிட்டு பொன்.ராதாகிருஷ்ணன் பேசியதாக, ஒரு செய்தி சமூக வலைதளங்களில் பரவுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி பார்க்கலாம்.
தகவலின் விவரம்:

Facebook Claim Link I Archived Link
தந்தி டிவி லோகோவுடன் பகிரப்பட்டுள்ள இந்த நியூஸ் கார்டு டெம்ப்ளேட்டில், பொன்.ராதாகிருஷ்ணன், அண்ணாமலை இருவரின் புகைப்படத்தை இணைத்து, அதன் கீழே, ‘’பொன் ராதாகிருஷ்ணன் கருத்து – நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கன்னியாகுமரியில் பாஜக வெற்றிக்கு அண்ணாமலை இன்சியல் போடக்கூடாது. கன்னியாகுமரி என் குழந்தை. அதை வளர்த்தவன் நான்,’’ என்று எழுதியுள்ளனர். இதனைப் பலரும் உண்மை என நம்பி ஃபேஸ்புக்கில் ஷேர் செய்வதைக் கண்டோம்.

உண்மை அறிவோம்:
சமீபத்தில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி மன்ற தேர்தலில், கன்னியாகுமரி, கோவை உள்ளிட்ட பகுதிகளில் பாஜக குறிப்பிடத்தக்க அளவில் வார்டு கவுன்சிலர் பதவிகளை கைப்பற்றியது.
Vikatan News Link I Hindu Tamil Link I BBC Tamil Link
இந்த சூழலில், மேற்கண்ட வகையில் பொன்.ராதாகிருஷ்ணன் பேசியதாகக் குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் சிலர் பதிவிட்டு வருகின்றனர். ஆனால், உண்மையில், இப்படி எந்த செய்தியும் ஊடகங்களில் வெளியாகவில்லை. மேலும், தந்தி டிவி ஆசிரியர் குழுவில் இதுபற்றி விசாரித்தபோது, ‘’இது நாங்கள் வெளியிட்டதல்ல. எங்களது பெயரில் பகிரப்படும் போலிச் செய்தி,’’ என்றனர்.
எனவே, பொன்.ராதாகிருஷ்ணன் பேசாத ஒன்றை, உண்மை போலக் குறிப்பிட்டு, மேற்கண்டபடி சிலர் வதந்தி பரப்புவதாக, சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram

Title:கன்னியாகுமரி என் குழந்தை; அண்ணாமலை இன்ஷியல் போடக்கூடாது என்றாரா பொன்.ராதாகிருஷ்ணன்?
Fact Check By: Pankaj IyerResult: False
