
பஹல்காம் தாக்குதலில் 15 இஸ்லாமியர்கள் உள்பட 26 பேர் கொல்லப்பட்டார்கள் என்று இந்தியா டிவி என்ற ஊடகம் செய்தி வெளியிட்டதாக சமூக ஊடகங்களில் பலரும் பதிவிட்டு வருகின்றனர். இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
பஹல்காம் தாக்குதலில் தந்தையை இழந்த பெண் ஒருவர் அளித்த பேட்டி வீடியோவுடன் நீண்ட பதிவு வெளியிடப்பட்டுள்ளது. அதில், “பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களின் முழுமையான பட்டியல் இது, இது இந்தியா டிவி செய்திகளில் ஒளிபரப்பாகியுள்ளது.
1- முகமது ஆசிப் உ.பி.
2 – அனிஸ் குரேஷி உ.பி.
3 – பைசல் கான் டெல்லி.
4 – சலீம் பைக் ராஜஸ்தான்.
5 – அனில் ராய் பீகார்.
6 – ரமேஷ் யாதவ் உ.பி.
7- பிரதீப் மிஸ்ரா உ.பி.
8 – ஆரிஃப் குரேஷி உ.பி.
9 – பிரவீன் தாக்கூர் ஹரியானா.
10 – ஜமீல் அகமது பஞ்சாப்.
11 – சுரேஷ் குமார் டெல்லி.
12 – மொஹ்சின் ஷேக் மகாராஷ்டிரா.
13 – அப்சல் அன்சாரி பீகார்.
14- மஞ்சு சர்மா ராஜஸ்தான்.
15- தீபக் வர்மா உ.பி.
16 – நாஜிம் கான் உ.பி.
17 – சுனில் குப்தா பீகார்.
18- அஸ்லம் மிர்சா குஜராத்.
19 – ராகேஷ் யாதவ் எம்.பி.
20-ஷெரீப் ஷேக் மகாராஷ்டிரா.
21- ஷாஹித் ஹுசைன் டெல்லி.
22-ரியாஸ் அகமது ஜம்மு.
23 – மீனாக்ஷி திரிபாதி உ.பி.
24 – சலீம் கான் உ.பி.
25 – நீரஜ் வர்மா ஹரியானா.
26- இர்ஷாத் கான் டெல்லி.
இறந்த 26 பேரில் 15 பேர் முஸ்லிம் பெயர்கள். இது கொலை செய்வதற்கு முன் இந்துக்களா என பெயர்கள் கேட்கப்பட்டு, பின்னர் கொல்லப்பட்டதாக கூச்சலிடும் கோடி மீடியாவை அம்பலப்படுத்துகிறது.
அரசாங்கம் இதைப் பற்றி கவனிக்க வேண்டும் போலி செய்தி சேனல்கள் மற்றும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். கோடி மீடியா வெறுப்பு மற்றும் கலவரங்களைப் பரப்புவதற்கு மிகவும் செல்வாக்கு மிக்க வழிமுறையாக செயல்படுகிறது.
தகவல் உபயம் பிரசாந்த் நஹாட்டா.
*〽️〽️காஷ்மீர் போனதனால் எனக்கு இரண்டு சகோதரர்கள் கிடைத்துள்ளார்கள் ஒருவரது பெயர் #ஷமீர் மற்றொருவர் பெயர் #முஷாபிர் என்னை அவர்களது சகோதரியை போல இரவு பகல் பாராமல் எனக்கு உதவி செய்தனர்- காஷ்மீர் தாக்குதலில் கொல்லப்பட்ட #ராமசந்திரன் மகள் #ஆரதி கண்ணீர் மல்க பேட்டி.” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த தகவலை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
பஹல்காம் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். தாக்குதல் சம்பவத்திற்கு மத ரீதியான சாயம் பூசப்பட்டு வருகிறது. இந்த தாக்குதலில் இஸ்லாமியர் ஒருவரும் கொல்லப்பட்டுள்ளார். ஆனால், 15 இஸ்லாமியர்கள் உயிரிழந்ததாக இந்தியா டிவி என்ற ஊடகம் செய்தி வெளியிட்டதாகப் பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். ஆனால் நாம் பார்த்த வரை செய்திகளில் அப்படி இல்லை. இந்தியா டிவி நியூஸ் என்ற ஊடகம் அப்படி ஏதேனும் செய்தி வெளியிட்டுள்ளதா என்று ஆய்வு செய்தோம்.
உண்மைப் பதிவைக் காண: indiatvnews.com I Archive
இந்தியா டிவி நியூஸ் வெளியிட்ட பஹல்காம் தாக்குதல் தொடர்பான செய்திகளைப் பார்த்தோம். அதில், உயிரிழந்த 26 பேரின் பெயர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது என்று ஒரு பட்டியலை அது வெளியிட்டிருந்தது. அதில்,
1) சுஷில் நாத்யால்
2) சையத் அதில் ஹுசைன் ஷா
3) ஹேமந்த் சுஹாஸ் ஜோஷி
4) வினய் நர்வால்
5) அதுல் ஸ்ரீகாந்த் மோனி
6) நீரஜ் உதவானி
7) பிடன் அதிகாரி
8) சுதீப் நியூபேன் (நேபாளம்)
9) சுபம் திவேதி
10) பிரசாந்த் குமார் சத்பதி
11) மனீஷ் ரஞ்சன் (வரி ஆய்வாளர்)
12) என். ராமச்சந்திரன்
13) சஞ்ஜய் லக்ஷ்மண் லாலி
14) தினேஷ் அகர்வால்
15) சமீர் குஹர்
16) திலீப் தசாலி
17) ஜே. சச்சந்திர மோலி
18) மதுசூதன் சோமிசெட்டி
19) சந்தோஷ் ஜக்தா
20) மஞ்சு நாத் ராவ்
21) கஸ்துபா கன்வோடே
22) பாரத் பூஷண்
23) சுமித் பர்மர்
24) யதேஷ் பர்மர்
25) தகேஹால்யிங் (விமானப்படை ஊழியர்)
26) ஷைலேஷ்பாய் எச். ஹிம்மத்பாய் கலதியா – என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
உண்மைப் பதிவைக் காண: thehindu.com I Archive
இந்த பட்டியலுக்கும் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவில் குறிப்பிடப்பட்ட பட்டியலுக்கும் தொடர்பில்லை. இந்தியா டிவி நியூஸ் மட்டுமின்றி எல்லா ஊடகங்களிலும் உயிரிழந்தவர்களின் பெயர் பட்டியல் வெளியாகி உள்ளது. தி இந்து ஆங்கில நாளிதழ் இணையதளத்தில் உயிரிழந்தவர்களின் புகைப்படத்துடன் பட்டியலை வெளியிட்டிருந்தனர்.
இந்திய அரசின் ஃபேக்ட் செக் தளமான பிஐபி பேக்ட் செக் (PIB Fact Check) எகஸ் தள பக்கத்தில், பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவர்கள் பட்டியல் தொடர்பாக சமூக ஊடகங்களில் பதிவும் பதிவு தொடர்பாக விளக்கம் அளிக்கப்பட்டிருந்தது. 15 இஸ்லாமியர்கள் பெயர் இருப்பது போன்று பரவும் பதிவின் ஸ்கிரீன்ஷாட் மீது ஃபேக் (FAKE) முத்திரையுடன் பதிவிடப்பட்டிருந்தனர். அதில், “சமூக ஊடகங்களில் பகிரப்படும் பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவர்கள் என்று பரவும் தகவல் தவறானது” என்று குறிப்பிட்டிருந்தனர்.
இவை எல்லாம் பஹல்காம் தாக்குதலில் 15 இஸ்லாமியர்கள் உயிரிழந்தார்கள் என்று இந்தியா டிவி நியூஸ் என்ற ஊடகம் செய்தி வெளியிட்டதாகப் பரவும் தகவல் தவறானது என்பதை உறுதி செய்தது.
முடிவு:
பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்த 26 பேரில் 15 பேர் இஸ்லாமியர்கள் என்று பரவும் பட்டியல் உண்மையானது இல்லை என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I X Post I Google News Channel I Instagram

Title:பஹல்காம் தாக்குதலில் 15 இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டதாக இந்தியா டிவி செய்தி வெளியிட்டதா?
Fact Check By: Chendur PandianResult: False
