FactCheck: கனிமொழி சிங்கப்பூர் குடியுரிமை பெற்றவரா?

அரசியல் | Politics சமூக ஊடகம் | Social தமிழ்நாடு | Tamilnadu

‘‘கனிமொழி சிங்கப்பூர் குடியுரிமை பெற்றவர்’’, என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு செய்தி பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். 

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். 

FB Claim Link l Archived Link

பலரும் இதனை உண்மை என நம்பி ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர். 

உண்மை அறிவோம்:

இதுபற்றி நாம் நேரடியாகக் கனிமொழியின் அலுவலகத்தை தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டோம். அவர்கள், ‘’ கனிமொழியின் கணவர் ஒரு சிங்கப்பூர் குடிமகன். அவரது மகனும் சிங்கப்பூர் குடியுரிமை பெற்றவர்தான். ஆனால், கனிமொழி, இந்திய குடியுரிமை மட்டுமே பெற்ற நபர். அதனால்தான், அவர் தொடர்ச்சியாக, தேர்தலில் போட்டியிடுகிறார். இரட்டை குடியுரிமை பெற்றவர் இவ்வாறு தேர்தலில் போட்டியிட முடியாது. சிலர் இந்த உண்மை புரியாமல் வதந்தி பரப்புகிறார்கள்,’’ என்று தெரிவித்தனர். 

தொடர்ந்து நாம் தகவல் தேடியபோது, இதுதொடர்பாக, ஏற்கனவே கனிமொழி ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியின் விவரம் கிடைத்தது. அதனை கீழே ஆதாரத்திற்காக இணைத்துள்ளோம். 

இந்த பேட்டியில், கனிமொழி தனது குடியுரிமை பற்றி தெளிவாகக் குறிப்பிடுகிறார். 

இந்திய வெளியுறவு அமைச்சகத்தின்படி, ஒரே நேரத்தில் வெளிநாட்டிலும் குடியுரிமை பெற்றுவிட்டு, இந்திய குடியுரிமையும் பெற்று, இங்கேயே வசிக்க முடியாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

eoi.gov.in link 

இதுபோலவே, இந்திய தேர்தல் ஆணையமும், நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல்களில் போட்டியிடும் நபர்களுக்கு, தகுந்த விதிமுறைகளை நிர்ணயித்துள்ளது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் 84 (a) பிரிவின்படி, ஒரு நபர் இந்தியக் குடிமகனாக இல்லாவிட்டால், நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட தகுதியற்றவர் என்று கருதப்படுகிறது. அரசியலமைப்பு பிரிவு 173 (a)-ன் படி மாநில சட்டப் பேரவைகளுக்கும் இதேபோன்ற விதிமுறை பின்பற்றப்படுகிறது. 

eci.gov.in link 

இறுதியாக, நாம் கனிமொழி கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலின்போது தாக்கல் செய்த வேட்புமனு விவரத்தைத் தேடி எடுத்தோம். அதில், அவர் PAN எண் பெற்றுள்ளதாகவும், ஆண்டுதோறும் வருமான வரி தாக்கல் செய்வதாகவும் குறிப்பிட்டிருந்ததைக் கண்டோம். குடியுரிமை எந்த நாட்டில் உள்ளதோ, அந்த நாட்டில்தானே வருமான வரி தாக்கல் செய்ய முடியும். இதன்படி, கனிமொழி இந்திய குடியுரிமைதான் பெற்றுள்ளார் என்பது தெளிவாகிறது. 

myneta.info link 

எனவே, கனிமொழியின் கணவரும், மகனும் சிங்கப்பூர் குடியுரிமை பெற்றிருந்தாலும், கனிமொழி இந்திய குடியுரிமை மட்டுமே பெற்றவர் என்பது சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது. 

இந்த உண்மை தெரியாமல், DESAM NEWS என்ற ‘வலதுசாரி ஆதரவு’ யூடியுப் சேனல், கனிமொழியின் பழைய பேட்டி ஒன்றை எடுத்து, அரைகுறையாகச் செய்தி வெளியிட அதனை உண்மை என நம்பி மற்றவர்களும் ஷேர் செய்து வருகிறார்கள். 

Youtube post link 

‘தன் குடும்பம் சிங்கப்பூர் குடியுரிமை பெற்றது’ என்றுதான் கனிமொழி கூறுகிறாரே தவிர, நான் சிங்கப்பூர் குடியுரிமை பெற்றுள்ளேன் என்று எங்கேயும் கூறவில்லை. யூடியுப் சேனல்கள் பலவும் தவறான தலைப்பிட்டு, இதுபோல செய்தி பகிர்ந்து மக்களை குழப்புவது வழக்கமாகியுள்ளது. 

இதுதொடர்பாக, ஏதேனும் கூடுதல் ஆதாரம் கிடைக்கும்பட்சத்தில் அதனையும் நாம் வெளியிட தயாராக உள்ளோம். 

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம். 

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram

Avatar

Title:FactCheck: கனிமொழி சிங்கப்பூர் குடியுரிமை பெற்றவரா?

Fact Check By: Fact Crescendo Team 

Result: Misleading