அரசியலுக்கு வரும் முன் போலீஸ் அதிகாரியாக இருந்த சீமான்: ஃபேஸ்புக் பதிவால் குழப்பம்

அரசியல் சமூக ஊடகம்

‘’அரசியலில் குதிக்கும் முன் சீமான் ஒரு போலீஸ் உயர் அதிகாரியாக இருந்தார்,’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை நடத்தினோம்.

தகவலின் விவரம்:

C:\Users\parthiban\Desktop\seeman 2.png

Archived Link

Suresh Thiruvallur என்ற ஃபேஸ்புக் ஐடி இந்த பதிவை வெளியிட்டுள்ளது. இதில், சீமானின் போலீஸ் சீருடை புகைப்படம் ஒன்றை பகிர்ந்து, அதனை உண்மை போல சித்தரித்துள்ளனர். இதனை பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக உள்ள சீமான் தற்போது தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். இதற்கு முன்பாக, அவர் சினிமா இயக்குனராகவும், நடிகராகவும் இருந்து வந்தார். ஆனால், 2009க்குப் பின்னர் முழு நேர அரசியல்வாதியாக மாறிவிட்டார். இந்நிலையில்தான், அவர் அரசியலுக்கு வரும் முன்பாக, போலீஸ் உயர் அதிகாரியாக பணிபுரிந்தார் எனக் கூறி, மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவை பகிர்ந்துள்ளனர்.

C:\Users\parthiban\Desktop\seeman 3.png

மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு பலரையும் குழப்பும் வகையிலான தகவலாக உள்ளதால், இதன்பேரில், Yandex இணையதளம் சென்று ரிவர்ஸ் இமேஜ் தேடல் செய்து பார்த்தோம். ஆனால், எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை. இதையடுத்து, கூகுள் சென்று சீமான் போலீஸ் அதிகாரியாக ஏதேனும் படத்தில் நடித்துள்ளாரா என விவரம் தேடினோம். அப்போது அவர் போலீஸ் அதிகாரி வேடத்தில் இருக்கும் பல்வேறு சினிமா படங்களின் காட்சிகள் கிடைத்தன.

C:\Users\parthiban\Desktop\seeman 4.png

இதன்படி,எவனோ ஒருவன், முந்திரிக்காடு மற்றும் கண்டுபிடி கண்டுபிடி போன்ற படங்களில், சீமான் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார் என தெளிவாகிறது. இந்த படங்களின் ஷூட்டிங் சமயத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை, நாம் ஆய்வு செய்யும் ஃபேஸ்புக் பதிவுடன் ஒப்பிட்டு பார்த்தோம்.

C:\Users\parthiban\Desktop\seeman 5.png

இதேபோல, கண்டுபிடி கண்டுபிடி படத்தின் புகைப்படத்தையும் ஆய்வு செய்தோம்.

C:\Users\parthiban\Desktop\seeman 6.png

இதையடுத்து, எவனோ ஒருவன் படத்தில் வரும் புகைப்படத்தையும் ஆய்வு செய்தோம். அதிலும், குறிப்பிட்ட ஃபேஸ்புக் பதிவில் வருவதை போலவே வாட்ச் அணிந்து சீமான் நடித்திருப்பதாக தெரியவந்தது.

குறிப்பிட்ட ஃபேஸ்புக் பதிவில் உள்ளது போலவே, இந்த படங்களின் ஸ்டில்களும் உள்ளன. அதேபோல, அந்த ஃபேஸ்புக் பதிவில் உள்ள புகைப்படத்தில் இருப்பதுபோன்ற கடிகாரம் அணிவதை சீமான் வழக்கமாக வைத்துள்ளார் என்று கண்டுபிடி கண்டுபிடி படத்தின் புகைப்படத்தில் இருந்து தெளிவாகிறது.

எனவே, சினிமா படத்தில் அவர் நடித்த புகைப்படத்தை அடிப்படையாக வைத்து, சீமான் இதற்கு முன் போலீஸ் அதிகாரியாக இருந்தார் என்று வதந்தி கிளப்பியுள்ளனர் என்று தெளிவாகிறது.

இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு செய்யும் ஃபேஸ்புக் பதிவு தவறான ஒன்று என முடிவு செய்யப்படுகிறது.

முடிவு:
உரிய ஆதாரங்களின்படி, மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறான ஒன்று என நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் யாரும் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோ போன்வற்றை மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:அரசியலுக்கு வரும் முன் போலீஸ் அதிகாரியாக இருந்த சீமான்: ஃபேஸ்புக் பதிவால் குழப்பம்

Fact Check By: Parthiban S 

Result: False