‘’ சந்திராயன் 3 வெற்றிக்காக பிரதமர் மோடி நேர்ச்சை,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு செய்தி பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.

Facebook Claim Link

பலரும் இதனை உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

மேற்கண்ட செய்தி உண்மையா என்று விவரம் தேடினோம். ஆனால், இவ்வாறு எந்த செய்தியும் தந்தி டிவியின் சமூக வலைதள பக்கங்களில் இடம்பெறவில்லை. இதைத்தொடர்ந்து, அவர்களது ஆசிரியர்கள் குழுவை தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டோம். ‘’இதனை நாங்கள் வெளியிடவில்லை,’’ என்று மறுப்பு தெரிவித்தனர்.

அடுத்தப்படியாக, நாம் இதன்பேரில் தொடர்ந்து தகவல் தேடியபோது, இதேபோன்று சில நாட்கள் முன்பாக, தந்தி டிவி வெளியிட்ட செய்தி ஒன்று காண கிடைத்தது. அதனையே எடிட் செய்து, இவ்வாறு வதந்தி பரப்பியுள்ளனர்.

உண்மையான நியூஸ் கார்டையும், போலியான கார்டையும் ஒப்பீடு செய்து, கீழே இணைத்துள்ளோம்.

எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட தகவல் தவறான ஒன்று என சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram

Avatar

Title:சந்திராயன் 3 வெற்றிக்காக பிரதமர் மோடி நேர்ச்சை இருப்பதாகப் பரவும் வதந்தி…

Written By: Fact Crescendo Team

Result: Altered