
‘’மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 62 ஆக உயர்வு,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.
தகவலின் விவரம்:
இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.
இதில், ‘’ மத்திய அரசு, 2024 ஆம் ஆண்டில், தனது ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 60 வயதிலிருந்து 62 வயதாக உயர்த்தியிருப்பது முக்கியமான ஒரு முடிவாக இருக்கிறது. இந்த முடிவு பல்வேறு காரணங்களுக்காகவே எடுக்கப்பட்டதாகும், மேலும் இது மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் அவர்களது சேவை காலத்தை நேரடியாகப் பாதிக்கும். இந்த முடிவின் பின்னணி, காரணங்கள், அதன் விளைவுகள் மற்றும் எதிர்காலத்தில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம். 1. ஓய்வு வயது உயர்வு – வரலாற்றுப் பின்னணி இந்த தீர்மானத்தின் பின்னணியாக, முந்தைய காலத்தில் நடந்த மாற்றங்களையும் கருத்தில் கொள்ளலாம்….’’ என்று எழுதப்பட்டுள்ளது.
பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
மேற்கண்ட தகவல் உண்மையா என்று நாம் ஆய்வு மேற்கொண்டோம். அப்போது, இது தமிழ் மட்டுமின்றி இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளிலும் பகிரப்பட்டு வருவதாக, தெரியவந்தது.
ஆனால், இது வதந்தி என்று PIB Fact Check மறுப்பு தெரிவித்துள்ளது.
அதாவது, 5வது ஊதியக்குழு சமர்ப்பித்த அறிக்கையில், மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 58 முதல் 60 வயது வரை உயர்த்த பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. மற்றபடி 62 வயதாக உயர்த்த எந்த பரிந்துரையும் இதுவரை மத்திய அரசுக்கு சமர்ப்பிக்கப்படவில்லை. தற்போது வழங்கப்பட்டுள்ள 7வது ஊதியக்குழு பரிந்துரைகளிலும் இவ்வாறு எதுவும் காண கிடைக்கவில்லை.
கூடுதல் ஆதாரம் இதோ…
DoPT Circular l Seventh Pay Commission Report
எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட தகவல் தவறானது, என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram

Title:மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 62 ஆக உயர்த்தப்பட்டதா?
Written By: Pankaj IyerResult: False
