‘’காமசூத்ரா புத்தகத்துடன் கவர்ச்சி போஸ் கொடுத்த ஜோதிகா’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு புகைப்படம் பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:


இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.

இந்த பதிவின் தலைப்பில் ‘’பள்ளிக்கூடம் கட்ட நிதி திரட்டிய போது...,’’ என்று எழுதப்பட்டுள்ளது.

இதனுடன் ஒரு புகைப்படம் இணைக்கப்பட்டுள்ளது. அதில், ஜோதிகா கவர்ச்சியான உடை அணிந்துள்ளார்; அவருடன் ஆண் ஒருவர் மேலாடையின்றி நிற்கிறார். இருவரது கையிலும் காமசூத்ரா புத்தகம் உள்ளது.

Claim Link I Archived Link

பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

ஜோதிகா மற்றும் அவரது கணவர் சூர்யா பிரபலமான சினிமா நடிகர்கள். மேலும், இருவரும் அவ்வப்போது சமூகம்/அரசியல் சார்ந்து ஏதேனும் கருத்து கூறுவதும், அதனால் சர்ச்சை ஏற்படுவதும் வழக்கம்.

இதன்காரணமாக, சூர்யா குடும்பத்தை குறிவைத்து, சில அரசியல் கட்சிகள் வதந்தி பரப்புவார்கள். அந்த வரிசையில் பரவும் மற்றொரு வதந்திதான் நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட கவர்ச்சி புகைப்படம்…


மும்பையை சேர்ந்த Personal Nutrition Coach Azhar ali Sayed, அவர் எழுதிய “Eat Your Cake, Lose Your Weight,” என்ற புத்தகத்தை அன்பளிப்பாக வழங்கினார்.

இந்த புகைப்படத்தை எடுத்து, ஆபாசமாக எடிட் செய்து, சிலர் வதந்தி பரப்புகிறார்கள்.


எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட ஜோதிகா பற்றிய புகைப்படம் எடிட் செய்யப்பட்ட ஒன்று, என சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram

Claim Review :   காமசூத்ரா புத்தகத்துடன் கவர்ச்சி போஸ் தரும் ஜோதிகா!
Claimed By :  Social Media User
Fact Check :  ALTERED