
‘’இந்திய அரசியல் தலைவருக்காக அமைக்கப்பட்ட டாய்லெட்’’, என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு புகைப்படம் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.
தகவலின் விவரம்:
இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.
இதில், ‘’ ஒரு இந்திய அரசியல் தலைவருக்காக அமைக்கப்பட்டது
Guess who is he,’’ என்று எழுதப்பட்டுள்ளது. இதனுடன் புகைப்படம் ஒன்றும் இணைக்கப்பட்டுள்ளது.
இதனை பலரும் உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
மேற்கண்ட தகவல் உண்மையா என்று நாம் ஆய்வு மேற்கொண்டோம். அப்போது, இது ஆன்லைனில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள டாய்லெட் மாடல் என்றும், இதற்கும் இந்திய அரசியலுக்கும் தொடர்பு கிடையாது என்றும் தெரியவந்தது.
Amazon Link l Alibaba l Bostana Link
எனவே, ஆன்லைனில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள டாய்லெட் மாடல் ஒன்றின் படத்தை எடுத்து, இந்திய அரசியலுடன் தொடர்புபடுத்தி வதந்தி பரப்புகிறார்கள், என சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram

Title:இந்திய அரசியல் தலைவருக்காக அமைக்கப்பட்ட டாய்லெட் என்று பரவும் புகைப்படம் உண்மையா?
Written By: Pankaj IyerResult: Missing Context
