
மசூதியில் இலவசமாக போர்வெல் அமைக்க உதவி எண்கள் என்று கூறி பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.
தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் சிலர் +91 9049053770 என்ற நமது சாட்போட் எண்ணிற்கு அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டிருந்தனர்.
இதன்பேரில், ஃபேஸ்புக்கில் தகவல் தேடியபோது, ஏராளமானோர் இது உண்மை என்று கூறி தகவல் பகிர்வதைக் கண்டோம்.

Screenshot: various FB posts with similar caption
உண்மை அறிவோம்:
இவர்கள் குறிப்பிட்டுள்ள அலைபேசி எண்களை முதலில் தொடர்புகொண்டு தகவலை உறுதிப்படுத்த தீர்மானித்தோம். இதன்படி, முதலில், 9700081587 எண்ணிற்கு அழைத்தோம். நீண்ட நேரம் முயற்சித்தும், அந்த எண் உபயோகத்தில் இல்லை என்றே பதில் கிடைத்தது.
அடுத்தப்படியாக, 2வதாக குறிப்பிடப்பட்டுள்ள 8886810557 என்ற எண்ணை தொடர்பு கொண்டோம். அந்த எண்ணிலும் எந்த பதிலும் இல்லை; உபயோகத்தில் இல்லை என்பதுதான் பதில்.
இதையடுத்து, 3வதாக உள்ள 9849233602 என்ற எண்ணை தொடர்பு கொண்டபோது, அழைப்பு ஏற்கவில்லை என்றே பதில் கிடைத்தது. நீண்ட நேரம் முயன்றும், அந்த எண்ணிற்கு, அழைப்பு செல்லவே இல்லை. இதுதவிர, இந்த 3 எண்களுமே, ஆந்திராவைச் சேர்ந்தவை ஆகும். ஒருவேளை யாரேனும், தனது அலைபேசி எண்ணை பிரபலப்படுத்தவோ அல்லது யாரையேனும் பழிவாங்கும் நோக்கில் தனக்கு வேண்டாதவர்களின் அலைபேசி எண்ணை இப்படி கொடுத்திருக்க வாய்ப்புள்ளது.
எனவே, 3 எண்களுமே உபயோகத்தில் இல்லை என்று தெரியவருகிறது. பயன்பாட்டில் இல்லாத எண்களை வைத்து, இப்படி தவறான தகவலை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர் என்று தெளிவாகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் தவறானது என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Title:மசூதியில் இலவசமாக போர்வெல் அமைக்க உதவி எண்கள்- உண்மையா?
Fact Check By: Pankaj IyerResult: False
