‘’ஏகாதசி விரதம் இருந்தால் புற்றுநோய் வராது, என்று கண்டுபிடித்த ஆய்வாளர்களுக்கு நோபல் பரிசு’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.

இதில், ‘’ If you keep ‘Ekadashi Fast’ then you will never get cancer. If a person remains without food or drink for at least 20 days in a year for 10 hours, his chances of getting cancer are 90% less. Because when the body is hungry, the body starts destroying those cells which cause cancer. This thinking has received the ‘Nobel Prize for Medicine’ this year. There is no answer to the scientificity of ‘Sanatan Dharma’’ என்று ஆங்கில மொழியில் எழுதப்பட்டுள்ளது.

Claim Link l Archived Link

பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

மேற்கண்ட தகவல் உண்மையா என்று நாம் கூகுள் உதவியுடன் விவரம் தேடினோம். அப்போது நமக்கு 2024ம் ஆண்டுக்கான நோபல் பரிசு எதுவும் இதுவரை அறிவிக்கப்படவில்லை என்று தெரியவந்தது. குறிப்பாக, மருத்துவ துறைக்கான நோபல் பரிசு அக்டோபர் 7, 2024 அன்று அறிவிக்கப்பட உள்ளது.

அடுத்தப்படியாக, இவர்கள் குறிப்பிட்டுள்ள Tasuku Honjo மற்றும் James P. Allison என்ற பெயர் கொண்ட ஆய்வாளர்கள் யார் என்று தகவல் தேடினோம். இதன்படி, கடந்த 2018ம் ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசு மேற்கண்ட இருவருக்கும் வழங்கப்பட்டதாக, தெரியவந்தது.

கூடுதல் செய்தி ஆதாரம் இதோ…

NY Times l oncology.ox.ac.uk l Fact Crescendo English

எனவே, 2018ம் ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசு பெற்ற Tasuku Honjo மற்றும் James P. Allison ஆகியோரின் பெயரை குறிப்பிட்டு, ‘ஏகாதசி விரதம் இருந்தால் புற்றுநோய் வராது’ என்று இவர்கள் கண்டுபிடித்ததாகக் கூறி வேண்டுமென்றே, சமூக வலைதளங்களில் வதந்தி பரப்புகிறார்கள் என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram

Avatar

Title:‘ஏகாதசி விரதம் இருந்தால் புற்றுநோய் வராது’ என்று கண்டுபிடித்த ஆய்வாளர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டதா?

Written By: Fact Crescendo Team

Result: False