தமிழக அமைச்சர் கடம்பூர் ராஜூ பற்றி பரவும் போலி நியூஸ் கார்டு!

அரசியல் சமூக ஊடகம்

‘’தமிழக அமைச்சர் கடம்பூர் ராஜூ, எச்.ராஜாவுக்கு ஆதரவாகப் பேசினார்,’’ என்று கூறி பகிரப்படும் நியூஸ் கார்டின் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். 

தகவலின் விவரம்: 

Facebook Claim LinkArchived Link

மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில், அமைச்சர் கடம்பூர் ராஜூ பற்றி புதிய தலைமுறை ஊடகம் வெளியிட்டதைப் போன்ற நியூஸ் கார்டு ஒன்றை பகிர்ந்துள்ளனர். அதில், ‘’எச்.ராஜாவை தவிர எந்த மதத்தை யார் புண்படுத்தினாலும் தமிழக அரசு வேடிக்கை பார்க்காது – அமைச்சர் கடம்பூர் ராஜூ,’’ என்று எழுதப்பட்டுள்ளது.

இதனைப் பலரும் உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:
தமிழகத்தில் தற்போது, அதிமுக – பாஜக கூட்டணியில் இருந்தாலும், அவ்வப்போது இரு தரப்பினரும் பரஸ்பரம் ஏதேனும் விமர்சிப்பதும், மாறுபட்ட கருத்துகளை தெரிவிப்பது வழக்கமான விசயமாக உள்ளது.

அதேசமயம், ஒரு சில விசயங்களில் இரு தரப்பினரும் ஒருமித்த கருத்து உடையவராகவும் செயல்படுகிறார்கள். அப்படிப்பட்ட சூழலில், சமீபத்தில் கறுப்பர் கூட்டம் என்ற யூடியுப் சேனல் இந்து மதத்தை விமர்சித்ததாக சர்ச்சை எழுந்தது.

இதன்பேரில், பல தரப்பிலும் கடுமையான கண்டனங்கள் கூறப்படுவதோடு, சம்பந்தப்பட்ட நபர்களையும் கைது செய்யும் அளவுக்கு இந்த விவகாரம் சூடுபிடித்துள்ளது.

FactCrescendo Tamil Link 1
FactCrescendo Tamil Link 2

இந்த சூழலில்தான் நாம் ஆய்வு செய்யும் ஃபேஸ்புக் பதிவில் தகவல் வெளியாகியுள்ளது.

எனவே, இந்த செய்தி உண்மையா என்ற சந்தேகத்தில் புதிய தலைமுறையின் அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கம் சென்று தகவல் தேடினோம். அப்போது, ஜூலை 21, 2020 அன்று கடம்பூர் ராஜூ பற்றி புதிய தலைமுறை ஊடகம் வெளியிட்ட உண்மையான நியூஸ் கார்டின் விவரம் கிடைத்தது. அதில், வேறு ஒரு விசயம் எழுதப்பட்டதைக் கண்டோம். 

Puthiyathalaimurai FB Post LinkArchived Link

எனவே, மேற்கண்ட ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட ஃபேஸ்புக் பதிவில் போலி நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளதாக, உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:
உரிய ஆதாரங்களின்படி நாம் ஆய்வு செய்த ஃபேஸ்புக் பதிவில் தவறான தகவல் உள்ளதாக நிரூபித்துள்ளோம். நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால் +91 9049044263 என்ற வாட்ஸ்ஆப் எண்ணிற்கு தகவல் தெரிவியுங்கள்.

Avatar

Title:தமிழக அமைச்சர் கடம்பூர் ராஜூ பற்றி பரவும் போலி நியூஸ் கார்டு!

Fact Check By: Pankaj Iyer 

Result: False

1 thought on “தமிழக அமைச்சர் கடம்பூர் ராஜூ பற்றி பரவும் போலி நியூஸ் கார்டு!

  1. Sorry for the news which is not cross checked by me. In future I will be very careful. Thank you sir.

Comments are closed.