Skip to content
Thursday, March 26, 2026
  • Privacy Policy
Fact Crescendo | The leading fact-checking website in India

Fact Crescendo | The leading fact-checking website in India

The Fact behind every viral news!

  • Home
  • Archives
  • எங்களைப் பற்றி
  • Contact Us
  • Other Languages
    • Hindi
    • English
    • Marathi
    • Gujarati
    • Malayalam
    • Odia
    • Assamese
    • Bangla
    • Manipuri
  • APAC
    • Sri Lanka
      • Sri Lanka Tamil
      • Sri Lanka English
    • Myanmar
      • Myanmar English
    • Bangladesh
    • Cambodia
      • Cambodia English
    • Afghanistan
      • Pashto
      • Afghanistan English
    • Thailand
      • Thailand English
site mode button

+140 எண்ணில் இருந்து ஃபோன் வந்தால் எடுக்கக் கூடாதா?

இந்தியா | India சமூக ஊடகம் | Social Media தமிழ்நாடு | Tamilnadu
September 28, 2022September 28, 2022Fact Crescendo Team

‘’140 என்ற எண்ணில் இருந்து ஃபோன் வந்தால் எடுக்க வேண்டாம், வங்கிக் கணக்கில் பணம் திருடுவார்கள் என்று மும்பை போலீஸ் எச்சரிக்கை,’’ என்று குறிப்பிட்டு, சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் சிலர் +91 9049044263 மற்றும் +91 9049053770 ஆகிய வாட்ஸ்ஆப் எண்களில் நமக்கு அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டிருந்தனர்.

இதுபற்றி தகவல் தேடியபோது, பலரும் ஃபேஸ்புக், வாட்ஸ்ஆப்பில் இதனை உண்மை போல பகிர்வதைக் கண்டோம்.

Facebook Claim Link I Archived Link

உண்மை அறிவோம்:
குறிப்பிட்ட தகவல் உண்மையா என்றால், இல்லை என்பதுதான் பதில். ஆம், இது Sony LIV 2020ம் ஆண்டு நிகழ்ச்சி ஒன்றை புரோமோஷன் செய்து, அதனால் சர்ச்சையில் சிக்கிய விவகாரம் தொடர்பானதாகும். இதுபற்றி மகாராஷ்டிரா சைபர் கிரைம் போலீசார் உரிய விளக்கம் அளித்துள்ளனர். அந்த ட்வீட் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

We have instructed the channel to cease this promotional activity immediately. (2/n)

— Maharashtra Cyber (@MahaCyber1) July 10, 2020

குறிப்பிட்ட நிறுவனமும் அப்போதே மன்னிப்பு கேட்டு, உரிய விளக்கமும் அளித்துள்ளது.

If you have received a call for our show Undekhi & it has disturbed you we would like to sincerely apologise to you. This was a test activity which has gone out accidentally & our intention was not to cause any kind of discomfort or panic. We sincerely regret any inconvenience.

— Sony LIV (@SonyLIV) July 10, 2020

இதுதவிர, 140 எண்ணில் இருந்து அழைப்பு வந்தால், எடுக்க வேண்டாம் என்று மும்பை போலீஸ் எந்த எச்சரிக்கையும் விடவில்லை. அவர்களும் விளக்கம் அளித்து, ட்வீட் வெளியிட்டுள்ளனர்.

The era of ‘any publicity is good publicity’ is a passé. Any publicity creating panic amongst citizens and suggesting a threat to their security will be dealt with necessary severity. Hope the fake calls for promotions aren’t bothering you any longer, Mumbaikars #SoNotDone

— मुंबई पोलीस – Mumbai Police (@MumbaiPolice) July 10, 2020

எனவே, 2020ம் ஆண்டிலேயே முடித்து வைக்கப்பட்ட ஒரு பிரச்னையை எடுத்து, மீண்டும் புதியதுபோல சிலர் தமிழ் மொழியில் பகிர்ந்து வருகின்றனர் என சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram

Avatar

Title:+140 எண்ணில் இருந்து ஃபோன் வந்தால் எடுக்கக் கூடாதா?

Fact Check By: Fact Crescendo Team 

Result: False

Tagged +140 எண்Bank AccountHOAXPhone Callஎச்சரிக்கைவங்கிக் கணக்கு

Post navigation

உலகிலேயே ‘அழகான கையெழுத்து’ – பிரக்ரிதி மாலா இந்திய மாணவி அல்ல!
பிஎஃப்ஐ தடை காரணமாக இந்திய ரூபாய் மதிப்பு உயரும் என நட்டா கூறினாரா?

Related Posts

பாஜக ஒழிக என்று கோஷமிட்ட தமிழிசை மகன்: 2019ல் எடுத்த வீடியோ தற்போது பரவுவதால் சர்ச்சை… 

December 29, 2023December 29, 2023Fact Crescendo Team

FACT CHECK: பள்ளிக் கல்வித் துறைக்கு வெறும் ரூ.32 கோடி ஒதுக்கிவிட்டு, கருணாநிதி நினைவிடத்துக்கு ரூ.39 கோடி ஒதுக்கப்பட்டதா?

September 2, 2021April 23, 2022Chendur Pandian

பெட்ரோல், டீசல் விலை; பத்திரிகையாளர் சந்திப்பை நிறுத்திய பாஜக தலைவர்கள்? உண்மை இதோ!

June 30, 2020January 12, 2022Chendur Pandian

Follow us

  • Fact checks
  • Comments

மாரிதாஸ், சவுக்கு சங்கர் கைது என்று பரவும் போலியான நியூஸ் கார்டு!

March 25, 2026March 25, 2026Chendur Pandian

துரந்தர் படக்குழு அயோத்தி ராமர் கோயிலுக்குச் சென்றார்களா?  

March 25, 2026March 25, 2026Pankaj Iyer

“இனி திமுக-வுடன் கூட்டணி இல்லை” என்று பாரிவேந்தர் கூறியதாகப் பரவும் நியூஸ் கார்டு உண்மையா?

March 23, 2026March 23, 2026Chendur Pandian

தமிழ்நாட்டுக்கு தனி ராணுவம் அமைக்கப்படும் என்று சீமான் அறிவித்தாரா? 

March 21, 2026March 21, 2026Pankaj Iyer

விஜயலட்சுமிக்கு வீடு வழங்கப்படும் என்று சீமான் கூறினாரா?

March 20, 2026March 20, 2026Chendur Pandian
  • Samsu Gani  commented on கோட்சேவின் சிலையை உடைத்த வட இந்தியர்கள் என்று பரவும் வீடியோ உண்மையா?: Thanks for fast check
  • Mustafa kamal  commented on எப்ஸ்டீன் கோப்புகள்: பெண்களுடன் மோடி இருப்பது போன்று பரவும் புகைப்படங்கள் உண்மையா?: O k
  • Mustafa kamal  commented on எப்ஸ்டீன் கோப்புகள்: பெண்களுடன் மோடி இருப்பது போன்று பரவும் புகைப்படங்கள் உண்மையா?: It is tru
  • Queen O'Hara  commented on தேர்தல் ஆணையத்திற்கு எதிராக பீகாரில் புரட்சி வெடித்ததா?: Excellent blog here Also your website loads up ver
  • Kevin Feest  commented on பீகார் வெற்றி கொண்டாட்டத்தில் பெண்ணிடம் தவறாக நடந்த பாஜக தொண்டர்கள் என்று பரவும் வீடியோ உண்மையா?: Nice blog here Also your site loads up very fast W

Categories

  • அரசியல் | Politics
  • தமிழ்நாடு | Tamilnadu
  • இந்தியா | India
  • சர்வதேசம் | International
  • தமிழகம் | Tamil Nadu

Latest Fact Checks

  • மாரிதாஸ், சவுக்கு சங்கர் கைது என்று பரவும் போலியான நியூஸ் கார்டு!

    March 25, 2026March 25, 2026Chendur Pandian
  • துரந்தர் படக்குழு அயோத்தி ராமர் கோயிலுக்குச் சென்றார்களா?  

    March 25, 2026March 25, 2026Pankaj Iyer

Archives

Fact Crescendo Tamil | Theme: News Portal by Mystery Themes.
  • Code Of Principles