உலகிலேயே ‘அழகான கையெழுத்து’ – பிரக்ரிதி மாலா இந்திய மாணவி அல்ல!

இந்தியா உலகச் செய்திகள் சமூக ஊடகம்

‘’இந்தியாவிலேயே சிறந்த கையெழுத்து என்று தேர்வாகியுள்ள பிரக்ரிதி மாலா,’’ என்று குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Facebook Claim Link I Archived Link

உண்மை அறிவோம்:
குறிப்பிட்ட தகவல் உண்மையா என விவரம் தேடினோம். அப்போது, மாணவி பிரக்ரிதி மாலா படிக்கும் பள்ளிக்கூடம் (Sainik Awasiya Mahavidyalaya) நேபாளம் நாட்டில் அமைந்துள்ளதாக, தெரியவந்தது. இதை வைத்து விவரம் தேடியபோது, 2016-17 காலக்கட்டத்தில் உலகிலேயே அழகான கையெழுத்துக்குச் சொந்தக்காரர் என்ற பெருமையை அவர் பெற்றதாக, அறிந்தோம். மேலும், அவர் இந்தியர் அல்ல; உலக அளவில் அவரது கையெழுத்து சிறந்தது என்ற சாதனையை படைத்திருக்கும் சூழலில் அவரை இந்திய அளவில் சிறந்த கையெழுத்து என்று சிலர் கூறுவது ஏற்புடையதல்ல.

studyinternational.com link I Hindu Tamil Link

நேபாளத்தைச் சேர்ந்த பள்ளி மாணவி உலகிலேயே அழகான கையெழுத்து பெற்றவர் என்ற செய்தியை எடுத்து, ‘பிரக்ரிதி மாலா ஒரு இந்தியர், இந்தியாவிலேயே சிறந்த கையெழுத்து அவருடையது,’ என்று குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர் என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram

Avatar

Title:உலகிலேயே ‘அழகான கையெழுத்து’ – பிரக்ரிதி மாலா இந்திய மாணவி அல்ல!

Fact Check By: Fact Crescendo Team 

Result: Partly False