ஈரான் ஏவுகணை தாக்குதலில் இஸ்ரேலுக்குச் சொந்தமான F35 ரக போர் விமானங்கள் அழிக்கப்பட்டதா?

சமூக ஊடகம் | Social சர்வதேச அளவில் I International

‘’ஈரான் ஏவுகணை தாக்குதலில் இஸ்ரேலுக்குச் சொந்தமான F35 ரக போர் விமானங்கள் அழிக்கப்பட்டதா’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.

இந்த பதிவில் ‘’ இஸ்ரேலின் 30 F ரக 35 போர் விமானங்களை ஈரான் யேவுகணை தாக்குதலால் வெற்றிகரமாக அழித்துள்ளது. இந்த ஜெட் விமானங்கள் 40,000 குழந்தைகளை இனப்படுகொலை செய்ய பயன்படுத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. It’s a pay back time”’’ என்று எழுதப்பட்டுள்ளது.

Claim Link 1 l Claim Link 2 l Archived Link

பலரும் இதனை உண்மை என நம்பி, ஃபேஸ்புக், எக்ஸ் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ள நிலையில், ஃபேஸ்புக், எக்ஸ் போன்ற சமூக வலைதளங்களில் பல்வேறு வதந்திகள் பரவ தொடங்கியுள்ளன. நாமும் அவை பற்றி தொடர்ச்சியாக ஃபேக்ட்செக் செய்து, வருகிறோம்.

Fact Crescendo Tamil Link 1 l Link 2 l Link 3

அந்த வரிசையில் பகிரப்படும் மற்றொரு வதந்திதான், ‘இஸ்ரேலின் F35 ரக போர் விமானங்களை ஏவுகணை மூலம் தாக்கி அழித்த ஈரான்’ எனும் மேற்கண்ட வீடியோ தகவலும்…

ஆம், பாலஸ்தீன எல்லைக்குட்பட்ட காஸா பகுதியில் அமைந்துள்ள Rafah என்ற இடத்தின் மீது கடந்த பல மாதங்களாக இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. அதில் ஏற்பட்ட சேதம் தொடர்பான ஒரு வீடியோதான் இது…

PRAY for #Rafah 🤲 🤲 #RafahUnderAttack #HumanRights @prakashraaj#Rafah_under_attack @UN
Video Credit @galamiou pic.twitter.com/IsIvZxVst8

— Mohd Abdul Sattar (@SattarFarooqui) February 12, 2024

இதுதொடர்பான புகைப்படங்கள், வீடியோ ஆதாரங்கள் நிறைய சமூக வலைதளங்களிலும், ஊடகச் செய்திகள் வாயிலாகவும் காணக் கிடைக்கின்றன.

ஈரான் வீசிய ஏவுகணைகளில் பெருமளவு iron dome பாதுகாப்பு வசதி மூலம் தடுக்கப்பட்டுவிட்டதால் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை என்று, ஏற்கனவே இஸ்ரேல் கூறியுள்ளது.

Reuters l Times of Israel l The Guardian

அத்துடன், தாக்குதலுக்கு உள்ளான இஸ்ரேல் விமானப் படைத்தளத்தின் புகைப்படம் கூட நமது தேடலில் கிடைத்துள்ளது.

ஆனால், இதற்கும், நாம் ஆய்வு செய்யும் வீடியோ காட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை. 

எனவே, காஸா (ரஃபா குடியிருப்புகள்) மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல் தொடர்பான வீடியோவை எடுத்து, ஈரான் தாக்குதலில் சேதமடைந்த இஸ்ரேலின் F35 ரக போர் விமானங்கள் என்று குறிப்பிட்டு, வதந்தி பரப்பியுள்ளனர் என சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம். 

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram

Avatar

Title:ஈரான் ஏவுகணை தாக்குதலில் இஸ்ரேலுக்குச் சொந்தமான F35 ரக போர் விமானங்கள் அழிக்கப்பட்டதா?

Written By: Pankaj Iyer  

Result: False