‘திருடர்கள் அனைவரும் திமுகவினரே’ என்று கமல்ஹாசன் ட்வீட் வெளியிட்டாரா?

அரசியல் | Politics சமூக ஊடகம் | Social தமிழ்நாடு | Tamilnadu

‘’திருடர்கள் அனைவரும் திமுகவினரே’’ என்று கமல்ஹாசன் ட்வீட் வெளியிட்டதாகக் கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம். 

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். 

Facebook Clam Link l Archived Link 

இதற்கு, ‘’ 04 Sep 2020 அன்று கமல் சார் சொன்னது’’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது. இதன் கீழே, கமல்ஹாசன் பெயரில் ஒரு ட்வீட் ஸ்கிரீன்ஷாட் பகிரப்பட்டுள்ளது. அதில், ‘’திமுகவில் இருப்பவர்கள் அனைவரும் திருடர்கள் இல்லை. ஆனால் திருடர்கள் அனைவரும் திமுகவினரே,’’ என்று எழுதப்பட்டுள்ளது. 

இதனை பலரும் உண்மை என நம்பி, ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.  

உண்மை அறிவோம்:

மேற்கண்ட ‘ஸ்கிரீன்ஷாட்’ பார்ப்பதற்கு கமல்ஹாசன் வெளியிட்டதைப் போன்று இருந்தாலும், உண்மையில் இது அவருடைய X வலைதள கணக்கு கிடையாது. 

@ikamalhaasan53 என்ற பெயரை பயன்படுத்தி X வலைதளத்தில் தகவல் தேடினோம். அப்போது, குறிப்பிட்ட ‘கணக்கு’ சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஒன்று என விவரம் கிடைத்தது. 

அதேசமயம், கமல்ஹாசனின் உண்மையான ஐடி @ikamalhaasan என்ற பெயரில் செயல்படுகிறது. மேலும், அவர் பிறந்த ஆண்டு 1954 ஆகும்; 1953 அல்ல. 

கூடுதல் ஆதாரத்திற்காக, மக்கள் நீதி மய்யம் தரப்பிலும் பேசி உறுதிப்படுத்தியுள்ளோம். 

எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட பதிவு கமல்ஹாசன் பெயரில் பகிரப்படும் போலியான ஒன்றென சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது. 

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம். 

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram

Avatar

Title:‘திருடர்கள் அனைவரும் திமுகவினரே’ என்று கமல்ஹாசன் ட்வீட் வெளியிட்டாரா?

Written By: Fact Crescendo Team 

Result: False