கமல்ஹாசன் கார் இன்சூரன்ஸ் புதுப்பிக்கவில்லை என்று பரவும் வதந்தி!

அரசியல் சமூக ஊடகம் தமிழ்நாடு

‘’கமல்ஹாசனின் கார் இன்சூரன்ஸ் புதுப்பிக்கப்படவில்லை,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் ஒரு தகவல் பகிரப்படுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.

தகவலின் விவரம்: 

Facebook Claim LinkArchived Link

இதில், கமல்ஹாசனின் கார் புகைப்படம் மற்றும் அதன் பதிவு எண், இன்சூரன்ஸ் புதுப்பிக்கப்படாத விவரம் உள்ளிட்டவற்றை தேதியுடன் குறிப்பிட்டு தகவல் பகிர்ந்துள்ளனர்.

இந்த தகவலை பலரும் உண்மை என நம்பி சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:
குறிப்பிட்ட பதிவில், mParivahan செயலியை பயன்படுத்தி எடுக்கப்பட்ட ஒரு ஸ்கிரின்ஷாட்டை பகிர்ந்து, மார்ச் 06, 2020 அன்றுடன் கமல்ஹாசனின் கார் காப்பீடு காலாவதியாகி விட்டதாகக் குறிப்பிட்டுள்ளனர். 

இதையடுத்து, ஊடகங்களில் இதுபற்றி செய்தி வெளியாகியுள்ளதா என்ற விவரம் தேடியபோது, சமயம் தமிழ் இணையதளத்தில் இதே செய்தியை பகிர்ந்திருந்தனர்.

Samayam Tamil News LinkArchived Link

ஆனால், மற்ற ஊடகங்களில் கமல்ஹாசன், இன்சூரன்ஸ் புதுப்பித்துவிட்டதாகக் கூறி விளக்கம் அளித்துள்ளதாக, செய்தி பகிர்ந்துள்ளனர். 

Archived Link

இதேபோல, ஒன் இந்தியா மற்றும் இதர இணையதளங்களில் வெளியான செய்தி விவரம் கீழே தரப்பட்டுள்ளது.

OneIndia Tamil LinkDinasuvadu.com Link

இதன்படி, மார்ச் 6, 2020 அன்று இன்சூரன்ஸ் கெடு முடிவடைந்த நிலையில், அடுத்த நாளில் இன்சூரன்ஸ் புதுப்பிக்கப்பட்டதாக, தெரியவருகிறது. குறிப்பிட்ட இன்சூரன்ஸ் ஆவணத்தின் நகல் கீழே தரப்பட்டுள்ளது. 

எனினும், முழு ஆதாரம் கிடைக்குமா எனக் கேட்டு, கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியிடம் கேட்டிருந்தோம். ஆனால், நமது ட்வீட்டுக்கு அவர்கள் தரப்பில் எந்த பதிலும் தரப்படவில்லை. 

இறுதியாக, https://vahan.nic.in/nrservices/ இணையதளம் சென்று, கமல்ஹாசனின் கார் பதிவு எண் (TN07CS7779 – LEXUS LX 570) வைத்து தகவல் பெற முயற்சித்தோம்.

அப்போது, அதில் கமல்ஹாசனின் கார் இன்சூரன்ஸ் 2022ம் ஆண்டு மார்ச் 6ம் தேதி வரை செல்லுபடியாகும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது, மார்ச் 6, 2020 அன்று இன்சூரன்ஸ் காலாவதியான நிலையில், அதனை அடுத்த 2 ஆண்டுகளுக்கு நீட்டித்து அவர் இன்சூரன்ஸ் செய்திருப்பதாக, தெரியவருகிறது. 

எனவே, கமல்ஹாசன் தரப்பில் ஏற்கனவே ஊடகங்களுக்கு விளக்கம் தரப்பட்டிருக்கிறது. இது தவிர, vahan NR e-Services இணையதளத்தில் 2022ம் ஆண்டு வரை அவரது கார் இன்சூரன்ஸ் செல்லுபடியாகும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

mParivahan செயலியில் இந்த தகவல் சரியாக பதிவேற்றப்படவில்லை என்ற நிலையில், அதனை உண்மை என நம்பி பலரும் சமூக வலைதளங்களில் தகவல் பரப்பி வருவதாக, சந்தேகமின்றி தெளிவாகிறது. 

மேலும், இதுபற்றி மக்கள் நீதி மய்யம் கட்சியின் தொழிலாளர்கள் அணி மாநில செயலாளர் சு.ஆ.பொன்னுச்சாமியிடம் பேசி, உறுதிப்படுத்தியுள்ளோம்.

இறுதியாக, வாகன இன்சூரன்ஸ் முடிவடைந்த பிறகுதான், எல்லோருமே இன்சூரன்ஸ் புதுப்பிப்பது வழக்கமாகும். முன்கூட்டியே யாரும் புதுப்பிக்க மாட்டார்கள். இதன்படி, கமல்ஹாசனின் கார் இன்சூரன்ஸ் மார்ச் 6, 2020 அன்று முடிவடைந்த நிலையில், அதனை அவர் அடுத்த நாளில் மார்ச் 7, 2020 அன்று இன்சூரன்ஸ் செய்துவிட்டார். தற்சமயம், 2022ம் ஆண்டு வரை அவரது காரின் இன்சூரன்ஸ் செல்லுபடி ஆகும் என்று, மத்திய அரசின் Vahan NR e-Services இணையதளத்தில் தகவல் கூறப்பட்டுள்ளதையும் இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில், கமல்ஹாசன் கார் இன்சூரன்ஸ் காலாவதி ஆகிவிட்டதாக பரவும் தகவல் உண்மையானதல்ல, என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் தவறானது என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Avatar

Title:கமல்ஹாசன் கார் இன்சூரன்ஸ் புதுப்பிக்கவில்லை என்று பரவும் வதந்தி!

Fact Check By: Pankaj Iyer 

Result: False

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •