
‘’கே.பி.முனுசாமி, வன்னியர் மற்றும் தேவர் சமூகத்தினரை ஒப்பீடு செய்து, விமர்சித்துப் பேசியுள்ளார்,’’ என்று கூறி பகிரப்படும் நியூஸ் கார்டு ஒன்றை சமூக வலைதளங்களில் காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.
தகவலின் விவரம்:

Facebook Claim Link I Archived Link
லோட்டஸ் டிவி பெயரில் பகிரப்பட்டுள்ள இந்த நியூஸ் கார்டில், அதிமுக மூத்த தலைவர் கே.பி.முனுசாமி, ‘’வன்னியர்கள் ஒன்றும் குற்றப் பரம்பரையினரோ காட்டை விற்றே கள்ளுக்குடித்த கூட்டமோ அல்ல. உண்மையான பாட்டாளிகள். உள் ஒதுக்கீடு என்பது அவர்களது உழைப்பிற்கு கிடைத்த அங்கீகாரம் – கே.பி.முனுசாமி (அதிமுக),’’ என்று எழுதியுள்ளனர்.
அந்த நியூஸ் கார்டை பகிர்ந்தவர், அதன் மேலே, ‘’இதோ பாருங்கள் சொந்தங்களே இவர்களை விட்டு விடக்கூடாது. நமது ஊருக்கு வரும்போது தெருவுக்கு அதிமுக காரர்களை விட வேண்டாம்,’’ என்று குறிப்பிட்டுள்ளார்.
இதனைப் பலரும் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
வன்னியர்களுக்கு 10.5% உள் இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவை தமிழ்நாடு அரசு (அதிமுக), சட்டமன்றத்தில் நிறைவேற்றியுள்ளது. இதனால், அதிமுக வன்னியர்களை ஆதரிப்பதாகவும், மற்ற ஜாதியினரிடம் பாரபட்சம் காட்டுவதாகவும் கூறி சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்படுகிறது.
The Hindu Tamil Link I Tamil Indian Express Link
இந்நிலையில்தான் மேற்கண்ட தகவல் ஃபேஸ்புக்கில் பகிரப்படுகிறது. ஆனால், இதுபோல கே.பி.முனுசாமி கூறினாரா என்றால் இல்லை என்பதுதான் உண்மை. நாம் இதுதொடர்பாக, லோட்டஸ் நியூஸ் சிஇஓ சரவணன் அவர்களை தொடர்பு கொண்டு கேட்டபோது, ‘’இது லோட்டஸ் டிவி வெளியிடவில்லை. போலியான செய்தி,’’ என்று கூறினார்.
எனவே, கே.பி.முனுசாமி இப்படி கூறவில்லை என்று சந்தேகமின்றி தெளிவாகிறது. அவர் இப்படி பேசியிருந்தால், அது மிகப்பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கும். ஆனால், அப்படி எங்கேயும் செய்தி வெளியாகவில்லை என்பதையும் இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் தவறானது என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Title:வன்னியர் மற்றும் தேவர் சமூகத்தினரை ஒப்பிட்டு கே.பி.முனுசாமி பேசினாரா?
Fact Check By: Pankaj IyerResult: False
