ஜிபி முத்துக்கு ஜோடியாக சிருஷ்டி டாங்கே நடிக்கிறாரா?

சமூக ஊடகம் | Social சினிமா | Cinema தமிழ்நாடு | Tamilnadu

டிக்டாக் பிரபலம் ஜிபி முத்துவுடன் நடிகை சிருஷ்டி டாங்கே கதாநாயகியாக இணைந்து படம் நடிக்க உள்ளதாக ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

நடிகை சிருஷ்டி டாங்கே, டிக்டாக் பிரபலம் ஜிபி முத்து ஆகியோர் ஒன்றாக இருக்கும் புகைப்படத்துடன் நியூஸ் கார்டு உருவாக்கப்பட்டுள்ளது. அதில், “ஜிபி முத்துவுக்கு ஜோடியான சிருஷ்டி டாங்கே – வைரலான புகைப்படம்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த நியூஸ் கார்டை மாலை மலர் நாளிதழ் தன்னுடைய சமூக ஊடக பக்கங்களில் பதிவிட்டுள்ளது. இதை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

ஜிபி முத்துவுடன் நடிகை சிருஷ்டி ஜோடி ஜோடி சேர்ந்துள்ளார் என்று மாலை மலர் நியூஸ் கார்டு வெளியிட்டுள்ளது. ஆனால் அப்படி எந்த ஒரு செய்தியையும் மாலை மலர் உள்ளிட்ட எந்த ஊடகமும் வெளியிடவில்லை. எனவே, இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

இந்த நியூஸ் கார்டை மாலை மலர் மே 5ம் தேதி வெளியிட்டிருந்தது. அன்றைய தினம் மாலை மலரில் வெளியான சினிமா செய்திகளைப் பார்த்தோம். அதிலும் ஜிபி முத்துவுடன் ஜோடியான சிருஷ்டி டாங்கே என்று எந்த செய்தியும் வெளியாகவில்லை. ஜிபி முத்து மற்றும் சிருஷ்டி டாங்கே ஆகியோரின் சமூக ஊடக பக்கங்களைப் பார்வையிட்டோம். அதில் இந்த புகைப்படம் இருந்தது. ஆனால், இருவரும் ஒரே படத்தில் கதாநாயகன், நாயகியாக நடிக்க ஒப்பந்தமானதாக எந்த செய்தியும் இல்லை.

இது குறித்து ஜிபி முத்து, சிருஷ்டி டாங்கேவுக்கு நெருக்கமான சினிமா செய்தியாளர்கள் சிலரை சந்தித்துப் பேசினோம். அவர்களிடம் இந்த செய்தியைப் பற்றிக் கேட்ட போது, “இது தவறான தகவல். இருவரும் இணைந்து நடிப்பதாக எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை. அவர்கள் இருவரும் ஒரு தொலைக்காட்சில் சமையல் நிகழ்ச்சியில் நடிக்கிறார்கள். அப்போது எடுத்த புகைப்படத்தைத் தவறாகப் பகிர்ந்திருக்கலாம்” என்றனர்.

ஜிபி முத்துவும், நடிகை சிருஷ்டி டாங்கேவும் ஒன்றாக டிவி ரியாலிட்டி ஷோவில் நடிக்கின்றனர். அப்போது ஒன்றாகப் படம் எடுத்ததை வைத்து மாலை மலர் நியூஸ் கார்டு வெளியிட்டுள்ளது. இது தவறான புரிதலை ஏற்படுத்தும் வகையில் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

முடிவு:

டிவி நிகழ்ச்சியில் பங்கேற்ற சிருஷ்டி டாங்கே, ஜிபி முத்து ஒன்றாக எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தங்களுடைய சமூக ஊடக பக்கங்களில் வெளியிட்டுள்ளனர். அதை வைத்து அவர்கள் இருவரும் ஒன்றாக ஜோடியாக நடிக்கிறார்கள் என்பது போன்று மாலை மலர் தவறாக நியூஸ் கார்டு வெளியிட்டிருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் உறுதி செய்துள்ளோம். எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:ஜிபி முத்துக்கு ஜோடியாக சிருஷ்டி டாங்கே நடிக்கிறாரா?

Fact Check By: Chendur Pandian 

Result: False