‘’மோடியை பாராட்டி ட்வீட் வெளியிட்ட மன்மோகன் சிங்’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.

பலரும் இதனை உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

மேற்கண்ட ட்வீட்டில், மன்மோகன் சிங் பெயர் @manmohan_5 என்று உள்ளது. இந்த பெயரில் ட்விட்டர் ஐடி எதுவும் தற்போது செயல்பாட்டில் இல்லை.

அடுத்தப்படியாக, மன்மோகன் சிங் ட்விட்டரில் ஐடி வைத்துள்ளாரா என்று விவரம் தேடியபோது, அவருக்கும், சோனியா காந்திக்கும் அப்படி எதுவும் இல்லை என்று தெரியவந்தது.

மேலும், அவ்வப்போது மன்மோகன் பெயரிலும், சோனியா பெயரிலும் சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவி வருவதால், இதுபற்றி காங்கிரஸ் கட்சி சார்பாக, அதன் சமூக வலைதளப் பிரிவு நிர்வாகி @SaralPatel ஏற்கனவே விளக்கம் அளித்துள்ளார். அவர் வெளியிட்ட ட்வீட் கீழே தரப்பட்டுள்ளது.

கூடுதல் ஆதாரத்திற்காக நாம் காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு தலைமை அலுவலகத்தை தொடர்பு கொண்டு, மேற்கண்ட ட்வீட் போலியான ஒன்றுதான் என்பதை உறுதிப்படுத்தியுள்ளோம்.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram

Avatar

Title: மோடியை பாராட்டி ட்வீட் வெளியிட்டாரா மன்மோகன் சிங்?

Written By: Fact Crescendo Team

Result: False