‘’ துருக்கி நிலநடுக்கத்தில் 33 கட்டிடங்களை இழந்த செல்வந்தரின் பரிதாப நிலை,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் படம் ஒன்றை கண்டோம். அதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.

தகவலின் விவரம்:

Facebook Claim Link l Archived Link

இந்த பதிவில், ‘’ து௫க்கியில் பூகம்பத்தில் 33 கட்டிடங்களின் உரிமையாளராக இருந்து, ரொட்டி மட்டுமே சாப்பிட்டு உயிர் பிழைத்து, தன்னால் இயன்ற இடத்தில் தங்குமிடம் தேடும் ஒரு நபராக தனது நிலையை மாற்ற வெறும் 17 வினாடிகள் ஆனது. *வாழ்க்கை கணிக்க முடியாதது எதுவும் நடக்கலாம் எதுவுமே நிரந்தரமில்லை* என்ற முக்கியமான பாடத்தை நமக்கு கற்றுத் தருகிறது. பணிவாகவும், கனிவாகவும் இருங்கள். இதுதான் வாழ்க்கை ,’’ என்று எழுதியுள்ளனர். அதன் கீழே முதியவர் ஒருவர் ரொட்டித் துண்டுகளுடன் கண்கலங்கி நிற்பது போன்ற ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளனர்.

உண்மை அறிவோம்:

சமீபத்தில், துருக்கி, சிரியா நாடுகளில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கம் பெரும் பாதிப்பு ஏற்படுத்தியுள்ளது. இதையொட்டி, சமூக வலைதளங்களில் ஏராளமான புகைப்படங்கள், வீடியோ உள்ளிட்டவை பகிரப்படுகின்றன. ஆனால், இவற்றில் பலவும் தவறான தகவல்களாக உள்ளன. நாம் கூட இவை பற்றி ஆய்வு செய்து, அவ்வப்போது செய்தி வெளியிட்டு வருகிறோம்.

Fact Crescendo Tamil Link 1 l Fact Crescendo Tamil Link 2 l Fact Crescendo Tamil Link 3

அந்த வரிசையில் பகிரப்படும் மற்றொரு போலியான செய்திதான், மேற்கண்ட புகைப்படம் பற்றியதும். ஆம், இந்த புகைப்படத்திற்கும், துருக்கி நிலநடுக்கத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை.

இந்த படம், 2001ம் ஆண்டு ஸ்லோவேனியா நாட்டில் உள்ள அங்காரன் என்ற இடத்தில் எடுக்கப்பட்டதாகும். இது இணையதளத்தில் representative image என்ற முறையில், விற்பனைக்கு கிடைக்கப் பெறுகிறது.

Anadoluimages.com link

நமது இலங்கைப் பிரிவினர் ஏற்கனவே இதுபற்றி வெளியிட்ட ஃபேக்ட்செக் லிங்க் கீழே தரப்பட்டுள்ளது.

Fact Crescendo Srilanka link

எனவே, மிகவும் பழைய ஒரு படத்தை எடுத்து, தற்போது நிகழ்ந்ததைப் போல வதந்தி பரப்பியுள்ளனர் என்று சந்கேமன்றி உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram

Avatar

Title:துருக்கி நிலநடுக்கத்தில் 33 கட்டிடங்களை இழந்த செல்வந்தரின் பரிதாப நிலை என்று பரவும் படம் உண்மையா?

Fact Check By: Fact Crescendo Team

Result: False