FactCheck: செய்தி வாசிப்பாளர் பனிமலர் பன்னீர்செல்வம் பற்றி பரவும் வதந்தி

அரசியல் | Politics சமூக ஊடகம் | Social தமிழ்நாடு | Tamilnadu

‘’பனிமலர் பன்னீர்செல்வம் உடன் கண்ணா பாண்டியன் காதல்,’’ எனும் தலைப்பில் பரவும் செய்தி ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். 

தகவலின் விவரம்: 

இதேபோல, இன்னொரு புகைப்படமும் பகிரப்படுகிறது. அதனையும் கீழே ஆதாரத்திற்காக இணைத்துள்ளோம். 

Facebook Claim Link 1Archived Link 1
Facebook Claim Link 2Archived Link 2
Facebook Claim Link 3Archived Link 3

உண்மை அறிவோம்:
இது பார்க்கும்போதே, உண்மையில்லை, போலியாக உருவாக்கப்பட்ட அட்டைப் படம் என்பது தெளிவாகிறது. இருந்தாலும், இதனைச் சிலர் உண்மை என நம்பி தொடர்ந்து சமூக வலைதளங்களில் பகிர்வதால், தனது தனிப்பட்ட வாழ்க்கை பாதிக்கப்படுவதாக, கண்ணா பாண்டியன் என்பவர் குறிப்பிட்டிருந்தார்.
இதுபற்றி நம்மிடம் முறையிட்ட அவர், விளையாட்டிற்காக நண்பர்கள் சிலர் உருவாக்கிய இந்த அட்டைப்படம், படிப்படியாக சமூக வலைதளங்களில் பரவி, தனக்கு வீண் சிக்கலை ஏற்படுத்தியுள்ளதாகவும் வருத்தம் தெரிவித்தார்.

இதற்கடுத்தப்படியாக, பனிமலர் தரப்பிலும் இதுபற்றி விளக்கம் கேட்டபோது, ‘’சிலர் முன் யோசனையின்றி தயாரித்து வெளியிடும் இத்தகைய கேலிப் படங்கள், பெண் என்ற முறையில் எங்களை பெரிதும் பாதிக்கிறது. இது மிகவும் கண்டிக்கத்தக்க செயல்,’’ என்று குறிப்பிட்டனர்.

எனவே, விளையாட்டிற்காக உருவாக்கப்பட்ட மேற்கண்ட அட்டைப் படம், தற்போது உண்மை போலவே சமூக வலைதளங்களில் பகிரப்படுவதாக, உறுதி செய்யப்படுகிறது. இதுபோன்ற மற்றவர்களை பாதிக்கக்கூடிய வகையில் விபரீதமான மீம்களை தயாரித்துப் பகிர வேண்டாம் என சம்பந்தப்பட்டவர்களையும், நமது வாசகர்களையும் கேட்டுக் கொள்கிறோம்.

முடிவு:

தகுந்த ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் தவறானது என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Avatar

Title:செய்தி வாசிப்பாளர் பனிமலர் பன்னீர்செல்வம் பற்றி பரவும் வதந்தி

Fact Check By: Pankaj Iyer 

Result: False