
‘’ஆர்எஸ்எஸ் ஆர்வலர் சௌமியா தேசாய் இஸ்லாம் மதத்திற்கு மாறினார்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றின் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.
தகவலின் விவரம்:

இந்த தகவலை வாசகர் ஒருவர் +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு அனுப்பி, உண்மையா என கேட்டிருந்தார்.
இதன்பேரில் தகவல் தேடியபோது பலரும் ஃபேஸ்புக்கில் இதனை பகிர்வதை கண்டோம்.

Facebook Claim Link I Archived Link
‘’குஜராத்தைச் சேர்ந்த ஆர்எஸ்எஸ் செயற்பாட்டாளர் சௌமியா தேசாய், சமீபத்தில் இஸ்லாம் மதத்திற்கு மாறினார். அவ்வாறு மாறியது மகிழ்ச்சி அளிக்கிறது,’’ என்று அவர் கூறியதாகக் குறிப்பிட்டு, விரிவான கட்டுரை மற்றும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
இதில், இளம்பெண் ஒருவர் காவி அணிந்தபடி பயிற்சி செய்யும் புகைப்படத்தில் இருப்பவர் யார் என தேடியபோது, 2017ம் ஆண்டு Nitin Kanotra என்ற புகைப்படக் கலைஞர், ஜம்மு காஷ்மீரில் தற்காப்பு பயிற்சி செய்த பெண்களை பற்றி எடுத்த புகைப்படம் இது என்று, தெரியவந்தது.
இதுபற்றி நமது மலையாளம் மொழிப் பிரிவினர் சம்பந்தப்பட்ட புகைப்படக் கலைஞரை தொடர்பு கொண்டு உறுதிப்படுத்தியும் உள்ளனர். இதுபற்றிய செய்தி விவரம் கீழே இணைக்கப்பட்டுள்ளது.
Global Times Link I Archived Link
அடுத்தப்படியாக, பர்தா அணிந்தது போல இருக்கும் புகைப்படத்தில் உள்ள பெண் யார் என தேடினோம். அவர், சௌமியா தேசாய் இல்லை; இதேபோல, சௌமியா தேசாய் பெயரில் பகிரப்படும் ட்விட்டர் கணக்கு உண்மையா என விவரம் தேடியபோது, அது தற்போது செயல்பாட்டில் இல்லை என தெரியவந்தது.
இது மட்டுமின்றி, சௌமியா தேசாய் இஸ்லாம் மதத்திற்கு மாறவில்லை என்று, நமது மலையாள மொழிப் பிரிவினர் உறுதிப்படுத்தியும் உள்ளனர்.
இதுபற்றி நமது மலையாளம் மொழிப் பிரிவு, விரிவான ஆய்வு நடத்தி, அதனை வெளியிட்டுள்ளது. அந்த லிங்க் கீழே தரப்பட்டுள்ளது.
எனவே, சௌமியா தேசாய் என்ற பெயரில் போலியான தகவலை சிலர் உருவாக்கி பகிர்வதாக, சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter Page I Google News Channel

Title:ஆர்எஸ்எஸ் நபர் சௌமியா தேசாய் இஸ்லாம் மதத்திற்கு மாறினாரா?
Fact Check By: Pankaj IyerResult: False
