வட இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட அரிய தாவரம் என்று பகிரப்படும் வதந்தி…

இந்தியா | India சமூக ஊடகம் | Social

‘‘வட இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட அரிய தாவரம்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ செய்தி பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். 

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். 

FB Claim Link l Archived Link

பலரும் இதனை உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர். 

உண்மை அறிவோம்:

வட இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட அரிய தாவரம் என்றும், தமிழ்நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட செடி என்றும் குறிப்பிட்டு மேற்கண்ட வீடியோ மற்றும் அதுதொடர்பான தகவலை பலரும் தொடர்ந்து சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார்கள். 

ஆனால், உண்மையில் இப்படி எந்த செடியும் தாவர உலகில் இல்லை என்று தெரியவந்துள்ளது. இந்த வீடியோவில் காட்டப்படுவது முன்கூட்டியே திட்டமிடப்பட்ட ஒரு செயற்கைத்தனமான காட்சியாகும். மேலும், சில தாவரங்களின் இலைகள், பூக்கள், தண்டுகளில் இடம்பெற்றுள்ள ரசாயனப் பொருட்கள் காரணமாக, அவை செம்புக் கம்பி, காந்தம் போன்றவற்றை காட்டும்போது ஏதேனும் விளைவுகளை வெளிப்படுத்தும். அதேபோல, இந்த செடி அருகே தீக்குச்சியை கொண்டு சென்றால் தானாக தீப்பற்றுகிறது என்று கூறுவதும் தவறாகும். இதுபோன்ற எந்த செடியும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என்றே தாவரவியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். 

இதுதொடர்பாக, ஏற்கனவே நமது குஜராத் பிரிவினர் விரிவாக ஃபேக்ட்செக் செய்துள்ளனர். அதனை படிக்க இங்கே கிளிக் செய்யவும். 

இந்த வீடியோவில் காட்டப்படுவது Bhilawa (Semecarpus anacardium) என்ற தாவரம் ஆகும். இது கொங்கண் கடலோர பகுதிகளில் அதாவது கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத் மாநிலங்களின் கடலோர காடுகளில் காணப்படும் முந்திரி மரக் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவகை தாவரம் ஆகும். இந்த செடிக்கு இதுபோன்ற பண்புகள் எதுவும் கிடையாது என்றும் உறுதி செய்யப்பட்டுள்ளது. 

எனவே, உண்மைத்தன்மை பற்றி ஆராயாமல் மேற்கண்ட வகையில் சிலர் வதந்தி பகிர்ந்து வருகின்றனர் என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது. 

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம். 

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram

Avatar

Title:வட இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட அரிய தாவரம் என்று பகிரப்படும் வதந்தி…

Fact Check By: Fact Crescendo Team 

Result: False