
‘’டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு பாடத்திட்டத்தில் இருந்து திருக்குறள் நீக்கப்பட்டது,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் ஒரு செய்தி பகிரப்படுகிறது. இதன் முழு விவரம் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.
தகவலின் விவரம்:

Facebook Claim Link I Archived Link
டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கான பாடத்திட்டத்தில் இருந்து திருக்குறள் நீக்கப்பட்டதாகக் கூறி, திமுக அரசை விமர்சித்து, இந்த ஃபேஸ்புக் பதிவை டிசம்பர் 28, 2021 அன்று வெளியிட்டுள்ளனர்.
உண்மை அறிவோம்:
டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கான புதிய பாடத்திட்டம் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அதில், குரூப் 2 முதன்மை தேர்வுக்கான பாடத்திட்டத்தில் இருந்து திருக்குறள் நீக்கப்பட்டிருந்தது. கடந்த 2019ம் ஆண்டில் திருக்குறள் இடம்பெற்றிருந்த நிலையில், தற்போதைய திமுக அரசு வேண்டுமென்றே அதனை நீக்கிவிட்டதாக, சமூக வலைதளங்களில் பலரும் விமர்சித்தனர்.
இதுபற்றி ஊடகங்களிலும் செய்தி வெளியாகியிருந்தது.
Maalaimalar Link
இதைத்தொடர்ந்து, டிசம்பர் 24 அன்று குறிப்பிட்ட குரூப் 2 முதன்மை தேர்வுக்கான பாடத்திட்டத்தில் மீண்டும் திருக்குறள் சேர்க்கப்படுவதாகக் கூறி, டிஎன்பிஎஸ்சி சார்பாக அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதன்படி, டிஎன்பிஎஸ்சி நடத்தும் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கும் கட்டாய தமிழ் மொழி தகுதித் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதில் விரிந்துரைக்கும் வகை (descriptive) தேர்வுக்கான பாடத்திட்டத்தில் திருக்குறள் இடம்பெறுகிறது.
இதுபற்றிய அறிவிப்பு டிஎன்பிஎஸ்சி அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (https://www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக ஊடகங்களிலும் அப்போதே அப்டேட் முறையில் உடனடியாக, செய்தி வெளியாகியுள்ளது.
Patrikai.com Link I News18 Tamil Link
எனவே, டிசம்பர் 24, 2021 அன்றே பாடத்திட்டத்தில் திருத்தம் செய்து, மீண்டும் திருக்குறள் சேர்க்கப்பட்டுவிட்டது. இந்த உண்மைத்தன்மை தெரியாமல், ‘திருக்குறள் டிஎன்பிஎஸ்சில பாடத்திட்டத்தில் இருந்து நீக்கப்பட்டதாக,’ பழைய செய்தியை புதியதுபோல பலரும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து குழப்பம் ஏற்படுத்துகின்றனர் என சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter Page I Google News Channel

Title:டிஎன்பிஎஸ்சி தேர்வு பாடத்திட்டத்தில் இருந்து திருக்குறள் நீக்கமா?- உண்மை இதோ!
Fact Check By: Pankaj IyerResult: Misleading

திருக்குறளை நீக்கப்பட்டதா இல்லையா??? பிறகு சேர்த்தது வேறு கதை…
உங்கள் கூற்றுப்படி பார்த்தால் மீத்தேன் திட்டத்தை அனுமதித்து பிறகு எதிராக திமுக இருந்தது. அதை மீத்தேன் திட்டத்திற்கு திமுக எதிராக இருந்ததை மட்டும் பேச வேண்டும், அவர்கள் கொண்டுவந்ததை பேச கூடாது என்பதுபோல் அல்லவா உள்ளது… இதந்த பேக்ட் செக் மிகப்பெரிய பித்தலாட்டம்.
தற்போதைய தத்தி அரசு முந்தைய அரசின் திட்டங்களுக்கெல்லாம் ஸ்டிக்கர் ஒட்டி சுயஇன்பம் அடைவதை ஏன் வேடிக்கை பாக்குறீங்க??? அதுக்கு போடுங்கடா பேக்ட் செக்