
‘’தங்கம் மற்றும் வைரத்தால் செய்த 3000 ஆண்டுகள் பழமையான அனந்த பத்மநாபசுவாமி சிலை’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.
தகவலின் விவரம்:
இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.
இதில், ‘’ 7800 கிலோ தூய தங்கம், 780,000 வைரங்கள் மற்றும் 780 காரட்களால் வைரத்தால் செய்யப்பட்ட சுமார் 3000 ஆண்டுகளுக்கு மேல் பழமையான அனந்த பத்மநாபசுவாமி சிலை. இதன் இன்றய மதிப்பு பல ஆயிரம் லட்சம் கோடிகள் எனவும் இதனை விலை மதிப்பீடு செய்ய முடியலை என ஸதபதிகள் மற்றும் நவீன வல்லுனர்கள் சொன்னார்கள் என்றும் சொல்லப்படுகிறது. பிரான்சில் இருந்து வரவழைக்கப்பட்ட வல்லுனர் குழு பிரமித்து போய் கணக்கிடமுடியாது திரும்பி சென்றனர் என்பது அறிந்ததே.இதை தரிசிக்க, கண்களால் காணவே பெரும் பாக்கியம் பண்ணியிருக்கவேண்டும்.நேரில் செல்ல முடியாதவர் இந்த காணொளிம மூலம் தரிசித்து பலன் பெறலாம்.எப்படி நாங்டள் சுவாமியை, கடவுளை நேரில் காணமுடியாத போது ஒரு படத்தையோ, விக்கிரகத்தையோ வைத்து வழிபடுவது போல்த்தான் இதுவும்.,’’ என்று எழுதப்பட்டுள்ளது.
இதனை பலரும் உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
மேற்கண்ட தகவல் உண்மையா என்று நாம் ஆய்வு செய்தோம். அப்போது, இது தவறான தகவல் என தெரியவந்தது. ஆம், ஐதராபாத்தை சேர்ந்த Shiv Narayan Jewellers சார்பாக, 8 இன்ச் உயரம், 2.8 கிலோ எடை மற்றும் 75,000 வைரங்களால் அலங்கரிக்கப்பட்ட தங்கத்தால் செய்த அனந்த பத்மநாபசுவாமி சிலைதான் இது. மற்றபடி, 3000 ஆண்டுகள் பழமை, 7800 கிலோ தங்கம், 7,80,000 வைரம் என்பதெல்லாம் வதந்தி.
கடந்த 2023ம் ஆண்டு மேற்கண்ட அனந்த பத்மநாபசுவாமி சிலையை கேரளாவில் உள்ள Bhima Jewellers தலைவர் B. Govindan என்பவருக்கு, டெடிகேட் செய்வதாக, Shiv Narayan Jewellers அறிவித்தது.
கூடுதல் செய்தி ஆதாரம் இதோ…
மேலும், Shivnarayan Jewellers pvt ltd வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவு இதோ…
இது மட்டுமின்றி, ஏற்கனவே இதுதொடர்பாக நமது Fact Crescendo English விரிவான ஃபேக்ட்செக் ஒன்றை வெளியிட்டுள்ளதையும் இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram

Title:தங்கம் மற்றும் வைரத்தால் செய்த 3000 ஆண்டுகள் பழமையான அனந்த பத்மநாபசுவாமி சிலை இதுவா?
Written By: Pankaj IyerResult: Misleading
