அயோத்தி ராமர் கோயில் கட்டுவதால் கான்பூரில் ஜடாயு பறவை காணப்பட்டதா?

அரசியல் | Politics சமூக ஊடகம் | Social தமிழ்நாடு | Tamilnadu தவறாக வழிநடத்துபவை I Misleading

‘’அயோத்தி ராமர் கோயில் கட்டுவதால் கான்பூரில் ஜடாயு பறவை காணப்பட்டது,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் வீடியோ ஒன்றை பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  

தகவலின் விவரம்:

இதனை வாசகர் ஒருவர் நமக்கு வாட்ஸ்ஆப் (+91 9049044263 & +919049053770) வழியே அனுப்பி, சந்தேகம் கேட்டிருந்தார். 

இதன் பேரில் தகவல் தேடியபோது, பலரும் ஃபேஸ்புக்கிலும் இதனை உண்மை என நம்பி ஷேர் செய்வதைக் கண்டோம்.

Facebook Claim Link l Archived Link 

உண்மை அறிவோம்:

குறிப்பிட்ட வீடியோவை உண்மயான ஜடாயு என்றே கூறி, கடந்த மாதம் பல்வேறு ஊடகங்களும் செய்தியாக, வெளியிட்டன. 

தொடர்ச்சியாக, ஜடாயு என்றே குறிப்பிட்டு, முன்னணி ஊடகங்கள் இந்த செய்தியை பகிரவே, பலரும் இதனை உண்மை என நம்பி ஷேர் செய்ய தொடங்கியுள்ளனர். 

அதேசமயம், சிலர் இதன் நம்பகத்தன்மை பற்றியும் கேள்வி எழுப்ப தொடங்கினர். 

ஆனால், உண்மை என்னவெனில், இது ஜடாயு இல்லை, HimalayanVulture அல்லது Himalayan griffon வகையை சேர்ந்த கழுகு ஆகும். இதுவும் ஒரு அரிய வகை உயிரினம்தான். ஆனால், இமயமலை சுற்றியுள்ள நாடுகள், திபெத் மற்றும் இந்திய துணைக்கண்டத்தில் இயல்பாகக் காணப்படும் பறவைதான் இது; ஜடாயு அல்ல.  

Thehindu link l thelucknowtribune link  

இதுபற்றி கான்பூர் zoo தரப்பிலும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. 

எனவே, HimalayanVulture அல்லது Himalayan griffon வகை கழுகு ஒன்று வழிதவறி கான்பூர் வந்ததை எடுத்து, ஜடாயு என்று ஊடகங்கள் பகிர, அதனை மற்றவர்களும் நம்ப தொடங்கியுள்ளனர் என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது. 


இந்த கழுகு; பல ஆண்டுகள் உயிர்வாழும் என்பதெல்லாம் தவறான கருத்து. இதன் ஆயுட்காலம் சுமார் 40 முதல் 50 ஆண்டுகள் என மதிப்பிடப்படுகிறது. 

ஜடாயு என்பது ராமாயணத்தில் வரும் ஒரு கற்பனை கதாபாத்திரம் ஆகும். இது ஒரு கழுகை உருவகப்படுத்தி, அமைக்கப்பட்டிருந்தாலும, உண்மையில் இப்படி அசாத்தியமான சக்தியுடன் கூடிய கழுகு இருக்க வாய்ப்பில்லை. 

ராமாயணத்திலேயே தெளிவாக ஜடாயு, ராவணனால் கொல்லப்பட்டதாகவும், ராமன் அதற்கு இறுதிச்சடங்கு செய்வித்து, மோட்சம் கொடுத்ததாகவும் குறிப்பிடப்படுகிறது. 

jatayu-moksham link l The Hindu link 

ஜடாயு நினைவாக, இந்தியாவைச் சேர்ந்த கழுகு மற்றும் கருடன் வகைப் பறவைகளை பாதுகாக்கும் வகையில், ஹரியானா மாநிலத்தில் Jatayu and Sparrow Conservation Breeding Centre ஒன்று கடந்த 2001ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த இடத்தில் இந்திய மற்றும் ஆசிய கழுகுகளை வளர்க்கும் பணிகள் நடைபெறுகின்றன. எனினும், இங்கே ஜடாயு என்ற எந்த பறவை இனமும் கிடையாது. 

கூடுதல் ஆதாரத்திற்காக, நாம் கேரளாவைச் சேர்ந்த பறவைகள் ஆய்வாளர் R. Sugathan-ஐ தொடர்பு கொண்டோம். அவர், ‘’இது திபெத், இமயமலை சுற்றுவட்டாரத்தில் அதிகளவு காணப்படும் கழுகு இனமாகும். குளிர்காலத்தின் பிற்பகுதியில் இமயமலையின் தெற்குப் பகுதிகளுக்கு இவை வருவது வழக்கம். அப்போது, வழிதவறி கான்பூர் வந்திருக்கலாம். Gyps himalayensis இதன் விலங்கியல் பெயர். இந்த பறவை அதிகபட்சமாக, 13 கிலோ எடை கொண்டதாக வளரும். இதன் 2 இறகுகளும் விரிக்கும்போது 3 மீட்டர் நீளம் கூட செல்லும். பார்க்க சற்று ராட்சத தோற்றத்தில் இருப்பதால், இதனை மக்கள் ஜடாயு என்று குறிப்பிட்டிருக்கலாம்,’’ என்றார்.   

உடல் தோற்றம்…

இதுபோன்ற வதந்திகள் அவ்வப்போது பரவுவது வழக்கம்தான். நாமும் இதுபற்றி ஏற்கனவே சில உண்மை கண்டறியும் ஆய்வு முடிவுகளை நடத்தியிருக்கிறோம். ஏற்கனவே, கேரளா மற்றும் தமிழ்நாட்டில் ஜடாயு பறவை காணப்பட்டதாக, பரவிய வதந்திகளை உரிய ஆதாரங்களுடன் தவறு என்றும் நிரூபித்துள்ளோம். அவற்றின் லிங்க் கீழே தரப்பட்டுள்ளது. 

Fact Crescendo Tamil link 1 l Fact Crescendo Tamil link 2 

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம். 

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram 

Avatar

Title:அயோத்தி ராமர் கோயில் கட்டுவதால் கான்பூரில் ஜடாயு பறவை காணப்பட்டதா?

Fact Check By: Fact Crescendo Team 

Result: MISLEADlNG