
‘’குடிப்பழக்கத்தை ஆதரித்து சன் டிவி வெளியிட்ட விளம்பரம்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.
தகவலின் விவரம்:
இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.
இதில், ‘’ சன் டிவி வீட்டுக்கும் நாட்டுக்கும் கேடு!
திமுக/திராவிடம் மனித குலதுக்கே கேடு!!
குடி பழக்கத்தை ஆதரித்து சன்டீவியின் விளம்பரத்தை பாருங்கள்!!!
தமிழகத்தின் சாபக்கேடு!!,’’ என்று எழுதப்பட்டுள்ளது.
Claim Link 1 l Claim Link 2 l Claim Link 3
பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
மேற்கண்ட தகவல் உண்மையா என்று நாம் ஆய்வு மேற்கொண்டோம். அப்போது, இது வேண்டுமென்றே அரசியல் உள்நோக்கத்துடன், Sun TV பெயரில் பகிரப்படும் ஒரு வதந்தி, என்று தெரியவந்தது.
ஆம், இவ்வாறு எந்த விளம்பரமும் சன் டிவி வெளியிடவில்லை. இதுதொடர்பாக, சன் டிவி டிஜிட்டல் பிரிவு நிர்வாகியிடமும் பேசி உறுதிப்படுத்தியுள்ளோம்.
அடுத்தப்படியாக, குறிப்பிட்ட வீடியோவில் வரும் காட்சிகளை ஆய்வு செய்தபோது, அதில் எங்கேயும் சன் டிவி பெயர் கூறப்படவில்லை. மாறாக, காட்சியின் பின்னணியில் டிவி ஒன்று இடம்பெற்றுள்ளது. அதில் சன் டிவி ஓடுகிறது. இதனையே தவறாக புரிந்துகொண்டு, சன் டிவிதான் இவ்வாறு விளம்பரம் வெளியிட்டதாக, வதந்தி பரப்புகிறார்கள். யார் வேண்டுமானாலும், வீட்டில் சன் டிவி பார்க்கலாம்; அதற்காக, அவர்களுக்கும், சன் டிவிக்கும் தொடர்புள்ளது என்று கூறுவது முற்றிலும் தவறான வாதம். அதுபோலத்தான் இந்த வதந்தியும்…
நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட வீடியோவை முதலில் பகிர்ந்தவர், sathya_dharshan_ என்ற இன்ஸ்டாகிராம் பயனாளர் ஆவார்.
இதன்படி, யூடியுப், இன்ஸ்டா போன்ற சமூக வலைதள பயனாளர் ஒருவர் எடுத்த வீடியோவை, சன் டிவிதான் வெளியிட்டதாகக் கூறி, தவறான தகவல் பரப்பப்படுவதாக, சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram

Title:குடிப்பழக்கத்தை ஆதரித்து சன் டிவி வெளியிட்ட விளம்பரம் என்று பரவும் தகவல் உண்மையா?
Fact Check By: Pankaj IyerResult: Misleading
