
‘‘கர்நாடகா தேர்தலில் போட்டியிட்ட திருமாவளவன்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.
தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.
இதில், 10/05/2001 அன்று நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி சார்பாக, தமிழ்நாடு முழுக்க போட்டியிட்ட விசிக வேட்பாளர்கள் மற்றும் தொகுதி விவரம் இடம்பெற்றுள்ளது. மங்களூர் தொகுதியில் திருமாவளவன் போட்டியிடுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
பலரும் இதனை உண்மை என நம்பி, கர்நாடகாவில் உள்ள மங்களூரில் திருமாவளவன் போட்டியிட்டதாகக் கூறி சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்வதைக் காண முடிகிறது.

உண்மை அறிவோம்:
மேற்கண்ட தகவல் உண்மையா என்று நாம் ஆய்வு மேற்கொண்டோம். அப்போது, இந்த மங்களூர் கர்நாடகாவில் இல்லை என்பதும், இது தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்தில் உள்ளது என்பதும் தெரியவந்தது.

இதன்படி, கடந்த 2001 சட்டமன்றத் தேர்தலில் கடலூர் மாவட்டம் மங்களூர் தனித் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட திருமாவளவன், 2004ம் ஆண்டு திமுக கூட்டணியை விட்டு விலகினார். அப்போது அவரது எம்எல்ஏ., பதவியையும் ராஜினாமா செய்தார்.
குறிப்பிட்ட மங்களூர் பகுதியில் திமுக மற்றும் விசிக சார்பாக இன்றளவும் அரசியல் நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம். அதற்கான சில செய்தி ஆதாரங்கள் இதோ…

எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட தகவல், தவறானது, என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram


