
‘’வைகோ பற்றியும், அவரது மகன், மகள் பற்றியும் உண்மையை போட்டுடைத்த மோகன் சி. லாசரஸ்,’’ எனக் கூறி பகிரப்படும் தகவல் ஒன்றை சமூக வலைதளங்களில் காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.
தகவலின் விவரம்:

இந்த வீடியோவில், மோகன் சி லாசரஸ், ‘’வைகோவின் குடும்பத்தினர் கிறிஸ்தவ மதத்திற்கு மாறிவிட்டனர். அவர் தினசரி என்னிடம் பைபிள் படித்து, பிரார்த்தனை செய்வது எப்படி என ஃபோனில் கேட்பார். அரசியல் காரணங்களால், இதனை அவர் வெளியில் அறிவிக்கவில்லை,’’ என்று பேசுகிறார்.
இந்த வீடியோவில் உள்ள தகவல் உண்மை என நம்பி பலரும், ‘மறுப்பு கூறாத வைகோ’, ‘வைகோவின் சாயம் வெளுத்தது’, என்றெல்லாம் கூறி ஃபேஸ்புக்கில் பதிவிட்டு வருகின்றனர்.

Screenshot: Various FB posts with same video and caption
உண்மை அறிவோம்:
இவர்கள் பகிர்ந்து வரும் வீடியோ தற்போது வெளியிடப்பட்ட ஒன்றல்ல. இது கடந்த 2017ம் ஆண்டு வெளியானதாகும். அதற்குரிய வீடியோ லிங்க் கீழே இணைக்கப்பட்டுள்ளது.
2017ம் ஆண்டு நவம்பர் மாதம் இந்த சர்ச்சை ஏற்பட்ட நிலையில், அப்போதே வைகோ இதுபற்றி மறுப்பு தெரிவித்திருந்தார். தனது குடும்பத்தினர் சமீப காலமாக, கிறிஸ்தவ மதம் பின்பற்றுவது ஏற்கனவே எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதான் எனவும், தான் ஒருபோதும் மதம் மாறவில்லை எனவும் வைகோ குறிப்பிட்டிருந்தார்.
அவரது பேட்டியை அப்போதே பல ஊடகங்களும் விரிவாக வெளியிட்டிருந்தன.

இதன்படி, வைகோவின் சகோதரி, அவரது மகள், மருமகன் போன்றோர் கிறிஸ்தவ மதத்தைப் பின்பற்றுகிறார்கள். அவரது மனைவி கிறிஸ்தவ ஆலயங்களுக்குச் செல்வது வழக்கம். ஆனால், வைகோ இந்து மதத்தையே பின்பற்றுகிறார். அவர் அரசியல் மேடைகளில் மேற்கோள் காட்டி பேசுவதற்காக, அனைத்து மத புத்தகங்களையும் படிப்பது வழக்கம். இதையே தவறாகப் புரிந்துகொண்டு, மோகன் சி லாசரஸ் 2017ம் ஆண்டு நவம்பரில் பேசியுள்ளார். இதற்கு, வைகோவும் அப்போதே விளக்கம் அளித்துவிட்டார்.
இந்நிலையில், அந்த வீடியோவை எடுத்து, தற்போது மீண்டும் புதியது போல சிலர் சமூக வலைதளங்களில் அரசியல் உள்நோக்கத்துடன் பகிர்ந்து வருவதாக, நமக்கு சந்தேகமின்றி தெளிவாகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் குழப்பமானது என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Title:வைகோ பற்றி மோகன் சி லாசரஸ் பேச்சு- பழைய வீடியோவும், உண்மையும்!
Fact Check By: Pankaj IyerResult: Partly False
