FactCheck: கவுதம் அதானி மனைவியை மோடி வணங்கியதாகப் பரவும் வதந்தி

இந்தியா | India சமூக ஊடகம் | Social

‘’அதானி மனைவி முன் குனிந்து நிற்கும் மோடி,’’ என்ற தலைப்பில் சமூக வலைதளங்களில் பகிரப்படும் புகைப்படம் ஒன்றை காண நேரிட்டது. இந்த தகவல் உண்மையா என ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.

தகவலின் விவரம்: 

Facebook Claim LinkArchived Link

குறிப்பிட்ட ஃபேஸ்புக் பதிவில், பெண் ஒருவரை பார்த்து, பிரதமர் மோடி குனிந்து வணங்குவதைப் போன்ற ஒரு புகைப்படத்தை பகிர்ந்து, அதன் மேலே, ‘’ வேறுயாருமல்ல.கெளதம் அதானியின் மனைவிதான்,’’ என்று எழுதியுள்ளனர். இதனைப் பலரும் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்து வருகின்றனர். 

உண்மை அறிவோம்:
மோடி தலைமையில் செயல்பட்டு வரும் பாஜக அரசு, தொழிலபதிவர் கவுதம் அதானியின் நலனுக்கு முக்கியத்துவம் தருவதாகப் பல்வேறு தரப்பிலும் குற்றம் சாட்டப்படுகிறது. இந்நிலையில், அதானியின் மனைவி முன் தலைகுனிந்து நிற்கும் மோடி என்ற தலைப்பில் அவ்வப்போது, சமூக வலைதளங்களில் தகவல் பகிரப்பட்டு வருகிறது.

இதன் ஒருபகுதியாக, ஏற்கனவே இப்படி ஒரு தகவல் பரவிய நிலையில், நாமும் அது தவறான தகவல் என நிரூபித்துள்ளோம். 

Fact Crescendo Tamil Link

இந்நிலையில், மீண்டும் ஒரு புகைப்படத்தை பகிர்ந்து, அதானி மனைவியை வணங்கும் மோடி என்று சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர். 

உண்மையில், குறிப்பிட்ட புகைப்படத்தில் இருப்பவர் அதானி மனைவி அல்ல. அவர், டெல்லியை சேர்ந்த என்ஜிஓ செயற்பாட்டாளர் தீபிகா மண்டல் என்பவர் ஆவார். கடந்த 2015ம் ஆண்டு ஒரு நிகழ்வில், மோடி அவரை பார்த்து வணங்கியபோது எடுக்கப்பட்ட புகைப்படம்தான் இது. 

Amarujala.com LinkArchived Link

மோடி மட்டுமல்ல, இந்தியாவின் பிரபலமான நபர்களுடன் அவர் புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார். 

எனவே, தீபிகா மோண்டல் என்பவரின் புகைப்படத்தை எடுத்து, கவுதம் அதானியின் மனைவி என்று கூறி தவறான தகவல் பகிர்ந்து வருகின்றனர் என்று சந்தேகமின்றி தெளிவாகிறது.

உண்மையில், கவுதம் அதானியின் மனைவி பெயர் ப்ரீத்தி அதானி. அவர் வேறு ஒரு நபர் ஆவார். 

முடிவு:

தகுந்த ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் தவறானது என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Avatar

Title:கவுதம் அதானி மனைவியை மோடி வணங்கியதாகப் பரவும் வதந்தி

Fact Check By: Pankaj Iyer 

Result: False

1 thought on “FactCheck: கவுதம் அதானி மனைவியை மோடி வணங்கியதாகப் பரவும் வதந்தி

  1. பெண்களை மட்டும் வணங்க (குனிந்து வணங்குவது அவர்களுக்கு இருவருக்கும் இடையே வேறு வியாபார நோக்கமாக இல்லை என்றால் ஒரு பயத்தில் மட்டுமே வர கூடிய செயல்)
    என்ன அவசியம், மோடி எப்போதுமே கார்பொரேட் கு மட்டுமே பலன் அளிக்க கூடிய திட்டங்களை செய்து வரும் மனிதர், அதற்கு என்னுடைய நிறைய பதிவுகள் சான்று ஆகும் தமிழ் மட்டும் ஹிந்தி காணொளி உள்பட

    பகுத்தறிந்து யோசிக்கும் திறன் உடைய மனிதர்கள் யோசிக்கலாம்

Comments are closed.