
‘‘நேதாஜியின் உருவம் பொறித்த 500 ரூபாய் தாள் குடியரசு தின விழாவில் வெளியிடப்பட்டது,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பரவும் தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.
தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.
இதில், ‘’ நேதாஜியின் உருவம் பொறித்த 500 ரூபாய் தாள்களை குடியரசு தின விழாவில் வெளியிட்டனர் |இப்பதான் முழு சுதந்திரம் அடைந்தது போல உள்ளது’’ என்று எழுதப்பட்டுள்ளது.
பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்வதைக் காண முடிகிறது.
உண்மை அறிவோம்:
மேற்கண்ட தகவல் உண்மையா என்று நாம் ஆய்வு மேற்கொண்டோம். அப்போது, இது AI முறையில் தயாரிக்கப்பட்ட புகைப்படம், என்று தெரியவந்தது. ஆம், இவ்வாறு நேதாஜியின் உருவம் பொறித்த 500 ரூபாய் தாள் எதுவும் குடியரசு தின விழாவில் வெளியிடப்பட்டதாக, எந்த செய்தியும் ஊடகங்களில் இடம்பெறவில்லை.
அடுத்தப்படியாக, குறிப்பிட்ட புகைப்படத்தில் தமிழ் சினிமா ஃபேன்ஸ் சேனல் / Tamil Cinema Fans Channel என்ற லோகோ உள்ளதைக் கண்டோம்.

இதன் அடிப்படையில் ஆய்வு செய்தபோது, Tamil Cinema Fans Channel என்ற பெயரில் இயங்கும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முதன்முதலாக, மேற்கண்ட புகைப்படம் பதிவு செய்யப்பட்டதாக, தெரியவந்தது. அதிலேயே, இந்த புகைப்படம் AI முறையில் தயாரிக்கப்பட்டது, என்று தெளிவாகக் குறிப்பிட்டுள்ளனர்.

இதன்மூலமாக, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட புகைப்படம் உண்மையானதல்ல, என்பது தெளிவாகிறது.
கூடுதல் ஆதாரத்திற்காக, hivemoderation, wasitai ஆகிய இணையதளங்கள் மூலம் மேற்கண்ட புகைப்படத்தை பகுப்பாய்வு செய்தோம். இது AI உதவியுடன் தயாரிக்கப்பட்டதுதான், என்று உறுதி செய்யப்பட்டது.

எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட புகைப்படம் தவறானது, என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram
Title:நேதாஜியின் உருவம் பொறித்த 500 ரூபாய் தாள் குடியரசு தின விழாவில் வெளியிடப்பட்டதா?
Fact Check By: Pankaj IyerResult: False


