அடுத்த 60 நாட்களில் உலகத்தில் நடப்பது என்ன? நாஸ்டர்டாம் கணிப்பு என்று பரவும் பழைய செய்தியால் பரபரப்பு…

சர்வதேசம் | International தமிழ்நாடு | Tamilnadu

‘’திக்.. திக்.. அடுத்த 60 நாட்களில் உலகத்தில் நடப்பது என்ன? நாஸ்டர்டாம் கணிப்பு’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம். 

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். 

இதில், ‘’ அடுத்த 60 நாட்களில் உலகத்தில் நடப்பது என்ன.. நாஸ்டர்டாம்..🤔🤔🤔😥😥
Let’s see what happens’’ என்று எழுதப்பட்டுள்ளது. 

இதனுடன், சத்தியம் டிவி லோகோவுடன் கூடிய வீடியோ ஒன்றும் இணைக்கப்பட்டுள்ளது. அதில், ‘’திக்.. திக்.. இந்த ஆண்டின் நவம்பர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையான அடுத்த 60 நாட்கள் எப்படி இருக்கும்? நாஸ்டர்டாமஸ் கணிப்பு. 3ம் உலகப் போர் வெடிக்கும்,’’ என்று கூறும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. 

Claim Link 1 l Claim Link 2 l Claim Link 3

பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர். 

உண்மை அறிவோம்:

மேற்கண்ட தகவல் உண்மையா என்று நாம் ஆய்வு மேற்கொண்டோம். முதலில், இந்த வீடியோவில் இடம்பெற்றுள்ள காட்சிகளை கவனமாக பார்வையிட்டோம். அப்போது, இதில் 31/10/2022 என்று தேதி உள்ளதைக் கண்டோம். 

இதன்பேரில், சத்தியம் டிவி யூடியுப் பக்கம் சென்று ஆதாரம் தேடினோம். கடந்த 2022ம் ஆண்டு அவர்கள் வெளியிட்ட வீடியோ ஒன்று நமக்கு கிடைத்தது. 

இதன்மூலமாக, 2022ம் ஆண்டு சத்தியம் டிவி வெளியிட்ட வீடியோவை எடுத்து, புதிய செய்தி போன்று தற்போது பரப்புகிறார்கள் என்று நமக்கு தெளிவாகிறது. முழு வீடியோ லிங்க் இதோ…

அதேசமயம், 2024ம் ஆண்டுக்கான நாஸ்டர்டாமஸ் கணிப்பு என்று கூறி ஏற்கனவே பல்வேறு ஊடகங்களிலும் செய்தி வெளியாகியுள்ளது. ஆனால், அவற்றில் இடம்பெற்றுள்ள தகவல் வேறொன்றாக உள்ளது. 

One India Tamil l NDTV l Wionews l Times of India

எனவே, 2022ம் ஆண்டு சத்தியம் டிவி வெளியிட்ட வீடியோவை எடுத்து, புதிய செய்தி போன்று தற்போது சமூக வலைதளங்களில் பகிர்ந்து, வதந்தி பரப்புகிறார்கள் என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம். 

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram 

Avatar

Title:அடுத்த 60 நாட்களில் உலகத்தில் நடப்பது என்ன? நாஸ்டர்டாம் கணிப்பு என்று பரவும் பழைய செய்தியால் பரபரப்பு…

Fact Check By: Pankaj Iyer 

Result: MISLEADING